» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

குடியுரிமை சட்டத்தை நிராகரிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் இல்லை: மத்திய அரசு தகவல்

சனி 14, டிசம்பர் 2019 8:30:53 AM (IST)

குடியுரிமை சட்டத்தை நிராகரிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் இல்லை என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் போன்ற நாடுகளில் இருந்து வந்து இந்தியாவில் குடியேறி இருக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமை திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதற்கு நேற்றுமுன்தினம் இரவு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். இதனால் அது சட்டமாக உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டத்துக்கு எதிராக அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பெரும் போராட்டங்களும், வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. 

இந்த சட்டத்தை எதிர்க்கட்சிகளும் கடுமையாக எதிர்த்து வருகின்றன. மேலும் இந்த சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்பதால் தங்கள் மாநிலங்களில் இதை அமல்படுத்தமாட்டோம் என எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் அறிவித்து உள்ளன. அந்தவகையில் சத்தீஸ்கார், கேரளா, மத்திய பிரதேசம், பஞ்சாப், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளன. ஆனால் இந்த சட்டத்தை அமல்படுத்தாமல் நிராகரிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் இல்லை என மத்திய அரசு கூறியுள்ளது. இந்த சட்டம் அரசியல் சாசனத்தின் 7-வது அட்டவணையின் கீழ் மத்திய அரசு சட்டங்களில் வகைப்படுத்தப்பட்டு உள்ளதால், மாநிலங்களால் அதை நிராகரிக்க முடியாது என தகவல் வெளியாகி உள்ளது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Thalir Products

Black Forest CakesNalam Pasumaiyagam

Thoothukudi Business Directory