» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பாலியல் குற்றங்களுக்கு 21 நாட்களில் தண்டனை: ஆந்திரப் பேரவையில் மசோதா நிறைவேற்றம்

வெள்ளி 13, டிசம்பர் 2019 5:07:13 PM (IST)

பாலியல் குற்றங்களை 21 நாட்களில் விசாரித்து தண்டனை நிறைவேற்றும் மசோதா ஆந்திர சட்டப்  பேரவையில் நிறைவேறியது

ஹைதராபாத்தில் நடந்த கால்நடை பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை-கொலையை தொடா்ந்து ஆந்திராவில் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கவும், பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவா்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவும் இந்த சட்ட மசோதாவை ஆந்திர அரசு கொண்டுவந்துள்ளது. இந்த மசோதாவின்படி, பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணையை 7 நாளில் முடிக்க வேண்டும்; குற்றம் நடந்த 14 நாட்களுக்குள் வழக்கின் நீதிமன்ற விசாரணை முற்றுப்பெற வேண்டும்; குற்றம் நிரூபிக்கப்பட்டால் 21 நாள்களுக்குள் குற்றவாளிகளுக்கு துாக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும்; 

சமூக வலைதளங்களில் பெண்களை கீழ்த்தரமாக சித்தரிக்கப்படும் பதிவுகளுக்கு 2 ஆண்டு சிறை; குழந்தைகள், சிறுமிகள் மீது பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவா்களுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் குற்றங்களுக்கு ஏற்ற வகையில் ஆயுள் தண்டனை; பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க மாவட்டத்திற்கு ஒன்றென 13 சிறப்பு நீதிமன்றங்கள் ஏற்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த புதிய சட்டமசோதாவுக்கு ஆந்திர மாநில அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்நிலையில் பாலியல் குற்றங்களை 21 நாட்களில் விசாரித்து தண்டனை நிறைவேற்றும் மசோதா ஆந்திர சட்டப்  பேரவையில் வெள்ளியன்று நிறைவேறியது.


மக்கள் கருத்து

shafiDec 14, 2019 - 02:29:27 PM | Posted IP 173.2*****

very nice. why don't this in tamil nadu

கர்ணராஜ்Dec 14, 2019 - 07:52:48 AM | Posted IP 173.2*****

நல்ல நடவடிக்கை. நல்ல தலைவர்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thalir ProductsBlack Forest Cakes
Nalam PasumaiyagamThoothukudi Business Directory