» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்கார சம்பவம் நான்கு பேர் கைது

வெள்ளி 29, நவம்பர் 2019 7:40:41 PM (IST)

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நெடுஞ்சாலையில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில், நான்கு இளைஞர்களை  போலீஸ் கைது செய்துள்ளது.

26 வயதாகும் பொடுலா பிரியங்கா ரெட்டி கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்தார். அவரது உடல் நேற்று தேசிய நெடுஞ்சாலை அருகே எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவர் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு பிறகு கொலை செய்து, எரிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. 

மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குத் திரும்பும் போது, தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு வந்துள்ளார். வழியில் அவர் தனது தங்கைக்கு போன் செய்து, வாகனத்தின் டயர் பங்சர் ஆகிவிட்டதாகவும், அடையாளம் தெரியாத இரண்டு பேர் வாகனத்துக்கு பஞ்சர் போட உதவி செய்வதாகவும் கூறியுள்ளார்.

அதே சமயம், தன்னிடம் தொடர்ந்து செல்போனில் பேசிக் கொண்டே இருக்கும்படியும், தனக்கு உதவி செய்யும் நபர்களைப் பார்த்தால் தனக்கு பயமாக இருப்பதாகவும் செல்போனில் கூறியுள்ளார். அவர் போனில் பேசிக் கொண்டிருக்கும் போதே திடீரென அவரது போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகியுள்ளது. உடனடியாக காவல்துறையினரை தொடர்பு கொண்ட குடும்பத்தினர் அவர் மாயமானதாக புகார் கொடுத்துள்ளனர்.

சுங்கச் சாவடிக்கு அருகே இருந்த சிசிடிவி கேமராவில், பிரியங்கா தனது வாகனத்தை ஓட்டிக் கொண்டு செல்லுவதும், அங்கே லாரி ஓட்டுநரைப் போல காணப்படும் இரண்டு பேர் டயர் பஞ்சர் ஆகிவிட்டதாக சொல்வதும், அவருக்கு உதவி செய்ய முன்வருவதும் பதிவாகியுள்ளது.இந்த சம்பவம் நடந்த பகுதியை ஒட்டிய இடங்களில் தேடுதல்  வேட்டை நடந்து வந்த நிலையில், அங்கிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் ஒரு பாலத்துக்கு அருகே எரிந்த நிலையில், பெண்ணின் உடல் இருப்பதை விவசாயி ஒருவர் பார்த்து காவல்நிலையத்தில் தெரிவித்தார்.

உடனடியாக பிரியங்காவின் குடும்பத்தாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது, அவர்கள் விரைந்து வந்து, பாதி எரிந்த நிலையில் இருந்து ஸ்கார்ஃப், தங்க நகையை வைத்து அந்த உடல் பிரியங்காவுடையதுதான் என்று அடையாளம் காட்டினர்.அவரது வாகனத்தை நிறுத்திவிட்டுச் சென்ற இடத்தில் இருந்து இந்த இடம் மிக  அருகில் இருந்தது. அவர் எரிக்கப்பட்ட இடத்தில் சில மதுபானப் பாட்டில்களும் இருந்ததைப் பார்த்த காவல்துறையினர், பிரியங்கா பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். 

தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்து எரித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில், நான்கு இளைஞர்களை குற்றவாளிகள் என்று போலீஸ் கைது செய்துள்ளது.இதில் பிரதமான குற்றவாளி முகமது பாஷா மற்றும் சிவா, நவீன், சென்னகேவலு ஆகியோர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads



Anbu Communications


Black Forest Cakes





Thoothukudi Business Directory