» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

வெள்ளி 29, நவம்பர் 2019 12:35:20 PM (IST)இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு, ராஷ்டிரபதி பவனில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

இலங்கையில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த அதிபர் தேர்தலில், மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபய ராஜபக்ச அமோக வெற்றிபெற்று, அதிபராக பதவியேற்றார். அதன்பிற்கு, இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க பதவி விலகியதை தொடர்ந்து, இடைக்கால பிரதமராக மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டார். 

இந்நிலையில், அதிபராக பொறுப்பேற்றபிறகு, முதல் வெளிநாட்டு பயணமாக கோத்தபய ராஜபக்ச இந்தியாவுக்கு வந்துள்ளார். நேற்று டில்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய கோத்தபய ராஜபக்சவுக்கு, சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.இந்நிலையில், இன்று காலை ராஷ்டிரபதி பவனில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. காரில் வந்திறங்கிய இலங்கை அதிபரை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வரவேற்றனர். 

பின்னர், முப்படை வீரர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்ட இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச,”இலங்கை அதிபராக நான் இருக்கும் இந்த ஆட்சிக் காலத்தில், இலங்கை – இந்தியா உறவுகளை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச்செல்ல விரும்புகிறேன். இருநாடுகளும், நீண்ட நிலையான நல்லுறவை வைத்துள்ளன. இருநாட்டு பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களின் பாதுகாப்பு ஆகியவற்றில் இருநாடுகளின் இணைந்து பணியாற்றவேண்டும்” என்று குறிப்பிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Black Forest Cakes
Anbu Communications

Thoothukudi Business Directory