» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

உத்தவ் தாக்கரேவுக்கு பிரதமர் மோடி ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் : சிவசேனா வேண்டுகோள்

வெள்ளி 29, நவம்பர் 2019 12:22:51 PM (IST)

உத்தவ் தாக்கரேவுக்கு பிரதமர் மோடி ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று சிவசேனா கேட்டுக்கொண்டுள்ளது.

மராட்டிய முதல் அமைச்சராக உத்தவ் தாக்கரே நேற்று  பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த சூழலில், சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:  மராட்டிய  அரசியலில் சிவசேனா மற்றும் பாஜக இடையிலான உறவுகள் பாதிக்கப்பட்டு இருக்கலாம். ஆனால், பிரதமர் மோடி, உத்தவ் தாக்கரே இடையே சகோதர ரீதியிலான உறவுகள் இருக்கிறது.

எனவே, மராட்டியத்தில் உள்ள இளைய சகோதரர் உத்தவ் தாக்கரே அரசுக்கும்,  மாநில வளர்ச்சிக்கும்  ஒத்துழைக்க வேண்டிய பொறுப்பு பிரதமர் மோடிக்கு  இருக்கிறது. பிரதமர் மோடி எந்த கட்சிக்கும் சார்ந்தவர் அல்ல, இந்த தேசத்துக்கே பொதுவானவர். ஆதலால், மராட்டிய  மக்கள் எடுத்துள்ள முடிவுக்கு மத்தியில் ஆளும் அரசு மதிப்பளித்து, எந்தவிதமான தொந்தரவும், இடையூறும் வழங்காமல் நிலையான அரசு செயல்பட ஒத்துழைக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu CommunicationsBlack Forest Cakes


Nalam PasumaiyagamThoothukudi Business Directory