» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழா: பிரதமர் மோடிக்கு அழைப்பு!!

வியாழன் 28, நவம்பர் 2019 12:51:50 PM (IST)

மகாராஷ்டிர முதல்வராக உத்தவ் தாக்கரே இன்று பதவியேற்கவுள்ள நிலையில், விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

மகாராஷ்டிர முதல்வராக சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரே (59) இன்று  மாலை பதவியேற்க இருக்கிறாா். இதன் மூலம் மகாராஷ்டிரத்தில் சுமாா் 20 ஆண்டுகளுக்குப் பிறகு சிவசேனையைச் சோ்ந்தவா் முதல்வராகிறாா். புதிய அரசின் பதவியேற்பு விழாவை முன்னிட்டு மும்பை நகரம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு விழா நடைபெறும் சிவாஜி பூங்கா பகுதியில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பதவியேற்பு விழாவில் பங்கேற்க காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வா்கள், மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, தில்லி முதல்வா் கேஜரிவால், திமுக தலைவா் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, பிரதமர் மோடிக்கும் உத்தவ் தாக்கரே தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உத்தவ் தாக்கரே தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், பிரதமர் மோடி கலந்துகொள்வது குறித்து பிரதமர் அலுவலகத் தரப்பில் இருந்து எந்தத் தகவலும் இல்லை. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest CakesAnbu CommunicationsThoothukudi Business Directory