» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர்: மக்களவையில் பாஜக எம்.பி பிராக்யா தாகூர் பேச்சு

வியாழன் 28, நவம்பர் 2019 11:03:37 AM (IST)

மகாத்மா காந்தியடிகளை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என்று மக்களவையில் பாஜக எம்.பி சாத்வி பிராக்யா தாகூர் பேசியதற்கு எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

2019ம் ஆண்டு எஸ்.பி.ஜி திருத்த மசோதா மீது நேற்று மக்களவையில் விவாதம் நடைபெற்ற போது திமுக எம்.பி ஏ. ராஜா தன் கருத்துகளை முன்வைத்தார். அப்போது மகாத்மா காந்தியை ஏன் நாதுராம் கோட்சே கொன்றார் என்பதற்கு விளக்கம் அளித்து பேசினார். மகாத்மா காந்தி ஒரு குறிப்பிட்ட கொள்கையில் நம்பிக்கை வைத்திருந்ததால் தான் நாதுராம் கோட்சே அவரை சுட்டுக்கொன்றார். தனக்கு 32 ஆண்டுகளாக காந்தியடிகள் மீது வெறுப்பு இருந்ததாக நாதுராம் கோட்சே தனது வாக்குமூலத்தில் ஒப்புக்கொண்டார் என ஏ ராஜா பேசினார்.

அப்போது ஏ. ராஜா பேச்சில் சாத்வி பிராக்யா தாகூர் குறுக்கிட்டார். பாஜக எம்.பி பிராக்யா தாகூர் பேசும் பொழுது நீங்கள் ஒரு தேசபக்தரை இங்கு உதாரணமாக கூற முடியாது என தெரிவித்தார். நாதுராம் கோட்சேவை ஒரு தேசபக்தர் என பிராக்யா தாகூர் குறிப்பிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் அவையில் குரல் எழுப்பினர். பிராக்யா தாகூரை இருக்கையில் அமரும்படி அவையில் இருந்த பாஜக எம்.பிக்கள் வலியுறுத்தினர். அதன் பின் ஏ. ராஜா கூறிய கருத்துக்கள் மட்டும் பதிவு செய்யப்படும் என சபாநாயகர் அறிவித்தார். அதன் பின் மசோதா மீதான விவாதம் தொடர்ந்தது.

விவாதத்தின் போது காங்கிரஸ் எம்.பி கவுரவ் கோகாய் பேசுகையில் நாதுராம் கோட்சேவை ஒரு தேசபக்தர் என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். அதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார். நாதுராம் கோட்சேவை தேசபக்தர் என பிராக்யா தாகூர் கூறுவது இது முதல்முறையல்ல. மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போதும் அவர் இந்த கருத்தை முன்வைத்தார். நாதுராம் கோட்சே தொடர்பான அவரது கருத்துக்கு எதிர்ப்பு வலுத்ததை தொடர்ந்து பிராக்யா தாகூர் தான் கூறியதற்கு மன்னிப்பு கேட்டார். ஆனால் பிராக்யா தாகூர் இவ்வாறு பேசியது மிகவும் தவறு. சமூகத்திற்கு கேடானது. அவரை என்னால் முழுமனதாக மன்னிக்க முடியாது என தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.  


மக்கள் கருத்து

உண்மைNov 29, 2019 - 11:14:21 AM | Posted IP 162.1*****

இவ ஒரு ஆம்பிளை

ராமநாதபூபதிNov 28, 2019 - 02:21:58 PM | Posted IP 162.1*****

இவனுக வேலையே இதுதான் பிள்ளையை கிள்ளி விடுவானுக பிறகு தொட்டிலையும் ஆட்டுவானுக

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Black Forest Cakes
Anbu Communications

Thoothukudi Business Directory