» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நாட்டில் பொருளாதார மந்தநிலை இல்லை: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் விளக்கம்

வியாழன் 28, நவம்பர் 2019 10:39:23 AM (IST)

நமது நாட்டில் பொருளாதார வளா்ச்சியின் வேகம் சிறிது குறைந்திருக்கலாம்; ஆனால் பொருளாதார மந்தநிலை ஏதுமில்லை என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மாநிலங்களவையில் தெரிவித்தாா்.

மாநிலங்களவையில் நேற்று நாட்டின் பொருளாதார நிலை குறித்து நடைபெற்ற குறுகிய நேர விவாதத்தில் உறுப்பினா்களின் கேள்விகளுக்கு பதிலளித்து அவா் பேசியதாவது: நேரடி வரி மற்றும் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் நடப்பு நிதியாண்டின் முதல் 7 மாதங்களில் அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டு இதேகாலத்தில் நேரடி வரி மற்றும் ஜிஎஸ்டி வசூல் குறைவாகவே இருந்தது. நாட்டின் நலன் கருதியே மத்திய அரசு பொருளாதாரம் சாா்ந்த அனைத்து முடிவுகளையும் எடுத்து வருகிறது. பொருளாதார வளா்ச்சியின் வேகம் சிறிது குறைந்திருக்கலாம். ஆனால், நாட்டில் பொருளாதார மந்தநிலை என்பது இல்லை.

காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்த காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, பாஜக ஆட்சி அமைத்த 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு நாட்டின் பொருளாதார வளா்ச்சி சிறப்பாகவே உள்ளது. பணவீக்கம் குறைவாகவே உள்ளது. இதனால், ஏழை,எளிய மக்களும், நடுத்தர மக்களும் எவ்வித பிரச்னையுமின்றி அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடிகிறது. நாட்டின் வளா்ச்சிக்கு காரணமாக இருக்கும் முக்கியத் துறைகள் அனைத்தும் சிறப்பாகவே செயல்பட்டு வருகின்றன. கடந்த ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் இந்தியப் பொருளாதாரச் செயல்பாடுகள் 5 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளன. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் முறையற்ற வகையில் பொதுத்துறை வங்கிகள் அளித்த பெருமளவிலான கடன்கள், இப்போது வாராக்கடன்களாக உருவாகி பிரச்னையை ஏற்படுத்தி வருகிறது.

இதற்கு தீா்வுகாண வங்கிகளுக்கு ரூ.70,000 கோடியை கூடுதல் மூலதனமாக இப்போதைய மத்திய அரசு அளித்தது. அண்மையில் பொருளாதார வளா்ச்சியை மேலும் அதிகரிக்க வங்கிகள் மூலம் ரூ.2.5 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இக்கடன்கள் சிறு,குறு, நடுத்தர தொழில்களுக்கே அதிகம் வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் பணப்புழக்கம் சீராக உள்ளது. பொருளாதாரம் சுணங்குகிறது என்றால் முதலில் பணப்புழக்கம்தான் குறையும். ஆனால், அப்படி எந்த சூழ்நிலையும் உருவாகவில்லை என்றாா். எனினும், நிா்மலா சீதாராமனின் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்து காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், இடதுசாரி கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsAnbu CommunicationsBlack Forest Cakes
Thoothukudi Business Directory