» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி விருது

வியாழன் 21, நவம்பர் 2019 8:46:29 AM (IST)50வது சர்வதேச திரைப்படவிழாவில் "ஐகான் ஆப் கோல்டன் ஜுப்ளி” என்னும் சிறப்பு விருது ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்த ஆண்டு 50-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நேற்று தொடங்கி நவம்பர் 28-ந்தேதி வரை 9 நாட்கள் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற உள்ளது. இந்தியாவும், ரஷியாவும் ஒருங்கிணைந்து இந்த விழாவை நடத்துகின்றன. மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையில் நடைபெற்ற தொடக்க விழாவில் பிரபல நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்று, குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடக்கி வைத்தனர்.

சர்வதேச திரைப்பட விழாவுக்கு இந்த ஆண்டு பொன்விழா என்பதால் இந்திய சினிமாவுக்கு முக்கிய பங்களிப்பு செய்த திரைப்பட கலைஞர்களை கவுரவிக்க முடிவு செய்த மத்திய அரசு, நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருதுகள் அறிவித்திருந்தது. 44 ஆண்டு திரைப்பட வாழ்வில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என 206 திரைப்படங்களில் நடித்துள்ள ரஜினிகாந்திற்கு சிறப்பு விருது வழங்க இருப்பதாக மத்திய அரசு அறிவித்திருந்தது 50-வது ஆண்டு சர்வதேச திரைப்பட விழாவின் சிறப்பு விருதான "ஐகான் ஆப் கோல்டன் ஜுப்ளி” என்னும் விருது ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது. 

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஆகியோர் இணைந்து ரஜினிகாந்துக்கு சிறப்பு விருதை வழங்கினர். விருது வாங்கியபின் ரஜினிகாந்த் பேசியது : "ஐகான் ஆப் கோல்டன் ஜுப்ளி” விருது பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு விருது வழங்கி கவுரவித்த இந்திய அரசுக்கு நன்றி.  விருதை வழங்கிய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், கோவா முதலமைச்சர், எனக்கு முன்மாதிரியாக உள்ள அமிதாப்பச்சன் ஆகியோருக்கும் நன்றி தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், ரசிகர்கள் மற்றும் என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்” என ரஜினிகாந்த் கூறினார்.

இந்த விழாவில் 76 நாடுகளை சேர்ந்த 200 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. 26 இந்திய படங்களும் திரையிடப்பட உள்ளன. தமிழ்த் திரைப்படங்கள் சார்பில் பார்த்திபன் இயக்கி, நடித்த ஒத்த செருப்பு மற்றும் ஹவுஸ் ஓனர் ஆகிய 2 படங்கள் திரையிடப்படுகின்றன. இந்தியில் இருந்து கல்லிபாய், சூப்பர் 30, பதாய் ஹோ, உரி: சர்ஜிக்கல் ஸ்டிரைக் உள்ளிட்ட படங்கள் திரையிடப்படுகின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Black Forest Cakes


Anbu CommunicationsThoothukudi Business Directory