» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இணையதளங்களில் பிராந்திய மொழிகளை பயன்படுத்த திட்டம் இல்லை: ரயில்வே துறை

புதன் 20, நவம்பர் 2019 6:50:33 PM (IST)

ரயில்வே இணையதளங்களில் பிராந்திய மொழிகளை பயன்படுத்தும் எந்தஒரு திட்டமும் இல்லை என்று ரயில்வே துறை மக்களவையில் விளக்கம் அளித்துள்ளது.

ரயில்வே துறையில் தமிழ், கன்னடம் போன்ற பிராந்திய மொழிகளில் தற்போது முன்பதிவில்லா ரயில் டிக்கெட் அச்சடிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. இந்நிலையில் ரயில்வே இணையதளங்களில் பிராந்திய மொழிகளை பயன்படுத்தும் எண்ணம் இருக்கிறதா என்பது குறித்து இன்று மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு ரயில்வே துறை சார்பாக எழுத்துப்பூர்வமாக அளிக்கப்பட்ட பதிலில், ரயில்வே இணையதளங்களில் இந்தி, ஆங்கிலம் தவிர மற்ற எந்த ஒரு பிராந்திய மொழிகளிலும்  தகவல்களை தர எந்த திட்டமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education

Anbu Communications

Black Forest CakesNalam PasumaiyagamThoothukudi Business Directory