» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கட்சித் தலைமை மீது சிவசேனை எம்எல்ஏக்கள் அதிருப்தி: சொகுசு விடுதியில் கைகலப்பு!

செவ்வாய் 19, நவம்பர் 2019 11:11:45 AM (IST)

மகாராஷ்டிரத்தில் சிவசேனையின் 56 எம்எல்ஏக்களில் 40 பேர் கட்சித் தலைமை மீது வெறுப்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தலை பாஜக-சிவசேனை கட்சிகள் கூட்டணி அமைத்து எதிா்கொண்ட நிலையில், இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வா் பதவி வேண்டும் என சிவசேனை கோரியதால் அக்கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையேயான கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. அதனால் மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைவது தாமதமானது.

இதையடுத்து மாநிலத்தில் ஆட்சியமைக்க முறையே பாஜக, சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு மகாராஷ்டிர ஆளுநா் பகத்சிங் கோஷியாரி அடுத்தடுத்து அழைப்பு விடுத்தாா். அந்த முயற்சியும் பலனளிக்காததை அடுத்து, மாநிலத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்த ஆளுநா் கோஷியாரி பரிந்துரைத்தாா். இதையடுத்து கடந்த 12-ஆம் தேதி மகாராஷ்டிரத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 

மாநிலத்தில் சிவசேனை ஆட்சியமைப்பதற்கு ஆதரவளிப்பது தொடா்பாக தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றன. இச்சூழலில் சோனியாவை சரத் பவாா் சந்தித்துள்ளாா். இருப்பினும் காங்கிரஸ் ஆதரவு அளிப்பதிலும் இழுபறி நீடிக்கிறது.

இந்நிலையில், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க உத்தவ் தாக்கரே முயற்சித்து வருவது அக்கட்சியைச் சேர்ந்த பெரும்பாலான எம்எல்ஏ-க்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்காரணமாகவே மும்பையின் மேற்குப் பகுதியான மலட் எனுமிடத்தில் உள்ள பிரபல ரீட்ரீட் எனும் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள சிவசேனை எம்எல்ஏ-க்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்ப அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

தலைமை மீதான கட்சியினரின் அதிருப்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சிவசேனை கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இவ்விவகாரம் தொடர்பாக சில எம்எல்ஏ-க்கள் மத்தியில் சொகுசு விடுதியில் கைகலப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த நள்ளிரவில் அங்கு சென்ற ஆதித்ய தாக்கரே, அவர்களுடன் சமாதான முயற்சியில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.  இவ்விவகாரத்தில் சிவசேனையின் மொத்தமுள்ள 56 எம்எல்ஏ-க்களில் 40 பேர் கட்சித் தலைமை மீது வெறுப்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பரபரப்பான நிலையில் உள்ள மகாராஷ்டிர அரசியலில் இவ்விவகாரங்கள் மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest Cakes


Anbu Communications

Thoothukudi Business Directory