» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இலங்கையின் புதிய அதிபராகும் கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஞாயிறு 17, நவம்பர் 2019 7:12:59 PM (IST)

இலங்கை அதிபர் தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று விரைவில் பதவியேற்கவுள்ள கோத்தபய ராஜபக்சேவின் வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ’அதிபர் தேர்தலில் தாங்கள் பெற்றுள்ள வெற்றிக்கு நல்வாழ்த்துக்கள்! நமது இருநாடுகள், நாடுகளின் மக்களுடனான தொடர்புகள் மேலும் வலுப்பெறும் வகையிலும், நமது பிராந்தியத்தில் அமைதி, வளம், பாதுகாப்பு ஆகியவை மேம்படும் வகையிலும் உங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்.  மேலும், இந்த தேர்தலை வெற்றிகரமாக நடத்திய இலங்கை மக்களை பாராட்டுகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் வாழ்த்துச் செய்திக்கு உடனடியாக கோத்தபய ராஜபக்சே நன்றி தெரிவித்துள்ளார். ’என்னை வாழ்த்தியமைக்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நமது இருநாடுகளும் வரலாறு, பொது நம்பிக்கை ஆகியவற்றால் பிணைந்துள்ளது. நமது நட்புறவை பலப்படுத்து விரைவில் உங்களை சந்திக்கவும் காத்திருக்கிறேன்’ என தனது டுவிட்டர் பக்கத்தில் கோத்தபய ராஜபக்சே பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Black Forest Cakes

Nalam Pasumaiyagam

CSC Computer Education


Thoothukudi Business Directory