» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

காந்திக்கு எதிராக துண்டு பிரசுரம் விநியோகம்: கோட்சே ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு

ஞாயிறு 17, நவம்பர் 2019 6:34:15 PM (IST)

மகாத்மா காந்திக்கு எதிராக வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரம் விநியோகித்த கோட்சே ஆதரவாளர்கள் மீது மத்தியப் பிரதேச போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து குவாலியர் நகரம் இந்து மகாசபா நடவடிக்கைகளில் ஒரு முக்கிய மையமாக இருந்து வருகிறது. மேலும், குவாலியரில் உள்ள இந்து மகாசபா ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக கோட்சேவை வணங்கி வருகின்றனர். கடந்த 2017ம் ஆண்டு குவாலியரில் அவரது சிலையை நிறுவ முயன்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் அந்த சிலையைக் கைப்பற்றி சிலை நிறுவுவதற்கு தடை விதித்தது.

இந்நிலையில், நாதுராம் கோட்சேவின் 70வது தியாக நாளில் ((நவம்பர் 15, 1949),  (15.11.2019, வெள்ளிக்கிழமை) அவரது செயற்பாட்டாளர்கள் கோட்சேவை வணங்கியதோடு,  மகாத்மா காந்தியை இழிவுபடுத்தும் துண்டு பிரசுரங்களை விநியோகித்துள்ளனர். காங்கிரஸ் ஆர்வலர் ரவீந்திர சவுஹான் அளித்த புகாரின் பேரில் மத்தியப்பிரதேச காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். துண்டு பிரசுரங்களை விநியோகித்த நபர்களை கைது செய்யும் முயற்சியில் குவாலியர் போலீஸார் ஈடுபட்டுள்ளனர் என மாநில சட்டத்துறை அமைச்சர் பி.சி. சர்மா தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

உண்மைNov 17, 2019 - 10:51:08 PM | Posted IP 162.1*****

ஒரு இந்து இன்னொரு இந்துவை கொல்றான் . ஏன் என்றால் அது மதவெறி ... மதவெறி நாட்டுக்கு ஆபத்தானது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu CommunicationsBlack Forest CakesThoothukudi Business Directory