» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சபரிமலை ஐயப்பனை தரிசிக்க அனுமதி கோரி 36 பெண்கள் ஆன்லைனில் முன்பதிவு

வெள்ளி 15, நவம்பர் 2019 5:29:32 PM (IST)

சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனத்துக்கு அனுமதி கோரி 36 பெண்கள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர்.

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்பது உச்சநீதிமன்றம் ஏற்கனவே அளித்த தீர்ப்பு. இத்தீர்ப்புக்கு எதிராக 60க்கும் மேற்பட்ட மறு ஆய்வு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் நேற்று தீர்ப்பை அளித்தனர்.  இதனால் இந்த வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. அதேநேரத்தில் சபரிமலைக்கு அனைத்து பெண்களும் செல்லலாம் என்ற முந்தைய உத்தரவுக்கு தடை ஏதும் விதிக்கப்படவில்லை.

இதனால் இந்த ஆண்டும் சபரிமலைக்கு செல்ல பெண்கள் முன்பதிவு செய்து வருகின்றனர். இதுவரை 36 பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோவில் தரிசனத்துக்கு அனுமதி கோரி ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். இவர்கள் அனைவருமே 10 வயது முதல் 50 வயது பெண்கள் என தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த நிலையில் நாளை (நவம்பர் 16ம் தேதி) மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. இதனால் அங்கு சாமி தரிசனத்திற்கு இளம்பெண்கள் மீண்டும் வருவார்கள என எதிர்பார்க்கப்படுகிறது.  மாநில அரசு, பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கி கோவிலுக்கு அழைத்துச் செல்லுமா அல்லது அவர்களுக்கு தடை விதிக்கப்படுமா என்பறு தெரியவில்லை.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes


Anbu CommunicationsThoothukudi Business Directory