» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மோடியை விமரிசித்த விவகாரத்தில் ராகுல் காந்திக்கு எச்சரிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்துவைப்பு

வியாழன் 14, நவம்பர் 2019 12:49:01 PM (IST)

ரஃபேல் போர் விமான ஒப்பந்த வழக்கில், பிரதமர் மோடியை விமரிசித்ததாக ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ராகுல் காந்தி, நேரில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரிய நிலையில், அவர் மீதான வழக்கை முடித்து வைத்த உச்ச நீதிமன்றம், ராகுலுக்கு ஒரு எச்சரிக்கையையும் விடுத்துள்ளது. அதாவது, நீதிமன்ற தீர்ப்பு குறித்து எதிர்காலத்தில் பேசும் போது, ராகுல் காந்தி எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ரஃபேல் போர் விமானம் வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றமே, பிரதமர் மோடியை, காவலாளியே திருடன் என கூறியதாக ராகுல் காந்தி கூறியிருந்தது கடும் சர்ச்சையான நிலையில், அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது. இந்த நிலையில், அவர் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியதால், இந்த வழக்கை முடித்து வைத்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsBlack Forest Cakes

Anbu CommunicationsThoothukudi Business Directory