» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பாபர் மசூதி அயோத்தி வழக்கில் நாளை காலை தீர்ப்பு : உச்ச நீதிமன்றம் அறிவிப்பு .!!

வெள்ளி 8, நவம்பர் 2019 11:07:19 PM (IST)

அயோத்தி வழக்கில் நாளை காலை 10.30 மணியளவில் தீர்ப்பு வழங்க உள்ளதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அயோத்தி வழக்கில் எப்பொழுது தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்ப்பு மேலோங்கியிருந்தது.இந்நிலையில் நாளை காலை 10.30 மணியளவில் உச்ச நீதிமன்ற சிறப்பு அமர்வு தீர்ப்பை வழங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வருகின்ற 17ம் தேதியுடன் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பணிக்காலம் நிறைவடையும் நிலையில், தற்போது உச்சநீதிமன்றம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அயோத்தி வழக்கில் நாளை உச்சநீதிமன்றத்தின் முழுமையான சிறப்பு அமர்வு தீர்ப்பு வழங்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து தலைமைச் செயலாளர் உள்துறை செயலாளர் டிஜிபி ஆகியோருடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். முதலமைச்சரின் இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதனும் பங்கேற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Black Forest Cakes

Anbu Communications

Friends Track CALL TAXI & CAB (P) LTD






Thoothukudi Business Directory