» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பாஜக மூத்த தலைவர் அத்வானியின் 92வது பிறந்தநாள்: பிரதமர் மோடி நேரில் வாழ்த்து

வெள்ளி 8, நவம்பர் 2019 4:08:08 PM (IST)



பாஜகவின் மூத்தத் தலைவர்களின் ஒருவரான எல்.கே. அத்வானியின் 92வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி நேரில் சென்று வாழ்த்துகளை தெரிவித்தார். 

1927ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கராச்சியில் பிறந்தார் அத்வானி. இந்தியாவில் இருந்து கராச்சி பிரிக்கப்பட்ட போது, அவரது குடும்பம் இந்தியாவுக்கு குடிபெயர்ந்தது. பாஜகவை நிர்மாணித்தவர்களில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயியும், அத்வானியும் முக்கியமானவர்கள், மேலும், பாஜகவின் தலைவராக அதிக காலம் பதவி வகித்தவர் என்ற பெருமையையும் அத்வானி கொண்டிருக்கிறார். ஐந்து முறை மக்களவை உறுப்பினராக இருந்த அத்வானி, கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. சில ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருந்து விலகி இருக்கிறார் அத்வானி.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Nalam Pasumaiyagam



CSC Computer Education

Black Forest Cakes




Thoothukudi Business Directory