» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஜெகன்மோகன் ரெட்டி சைக்கோ போல நடந்து கொள்கிறார்: சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு!

சனி 12, அக்டோபர் 2019 3:45:03 PM (IST)

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சைக்கோ போல செயல்படுவதாக எதிர்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.

ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவுக்கும், தற்போதைய ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. பல கூட்டங்களில் சந்திரபாபு நாயுடு முதல்வர் ஜெகன்மோகனை விமர்சித்து பேசி வருகிறார்.

இந்நிலையில் நேற்று விசாகப்பட்டிணத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர் "ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆந்திராவில் மக்கள் விரோத ஆட்சியை செய்து வருகிறது. எதிர்க்கட்சி தலைவர்கள் மீது தேவையற்ற சட்ட விரோதமான வழக்குகள் பதியப்படுகின்றன. என்னிடம் நல்லபடியாக பழகுபவர்களுக்கு மட்டுமே நான் நல்லவனாக இருப்பேன்.ஜெகன் மோகன் ரெட்டி ஒரு சைக்கோ போல செயல்படுகிறார். பல முதலமைச்சர்களை பார்த்துள்ளேன். ஆனால் ஜெகன் மோகன் போல மோசமான ஒரு முதல்வரை பார்த்ததே இல்லை” என கூறியுள்ளார். சந்திரபாபு நாயுடு தொடர்ந்து ஜெகன்மோகன் ரெட்டியை விமர்சித்து வருவதால் இரு கட்சி தொண்டகளிடையேயும் பல்வேறு விரோத போக்குகள் ஏற்பட்டு வருகின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsFriends Track CALL TAXI & CAB (P) LTD

Black Forest CakesAnbu Communications
Thoothukudi Business Directory