» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகை: வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

புதன் 9, அக்டோபர் 2019 12:07:15 PM (IST)

சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகை குறித்து வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங், அக்டோபர் 11 மற்றும் 12ம் தேதிகளில் மாமல்லபுரத்தில் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.  இதையொட்டி வரலாறு காணாத ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட  சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் அக்டோபர் 13-ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. மோடி - சீன அதிபர் வருகையையொட்டி  இறுதிக்கட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. 

பாதுகாப்புக்கு 10 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். மாமல்லபுரத்திற்குள் 4 சக்கர வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் சீன அதிபர் ஜி  ஜின்பிங் வரும் 11, 12ம் தேதிகளில் இந்தியா வருவதை வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங் வரும் 11, 12ம் தேதிகளில் இந்தியா வருகை; பல்வேறு துறைகளில் இருதரப்பு விவகாரங்கள், உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடி, சீன அதிபர் விவாதிக்கவுள்ளனர்  என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Anbu Communications


Nalam Pasumaiyagam

Black Forest Cakes

CSC Computer Education



Thoothukudi Business Directory