» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பிரதமரிடம் உண்மையைச் சொல்ல பொருளாதார வல்லுநர்கள் அச்சம்: சு.சுவாமி பேச்சு!!

செவ்வாய் 1, அக்டோபர் 2019 5:50:57 PM (IST)

பிரதமரிடம் உண்மையை உரக்கச் செல்ல அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ள பொருளாதார வல்லுநர்கள் அஞ்சுகின்றனர் என  பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் அவர் கூறுகையில், மோடி அரசாங்கத்தில் மிகச் சிலரால் மட்டுமே தனித்து செயல்பட முடியும். அவர்களிடம் எது தேவை, தேவையில்லை என்பதை முகத்திற்கு நேராகச் சொல்லபவர்களை பிரதமர் மோடி ஊக்குவிக்க வேண்டும். ஆனால், அவர் இன்னும் அந்த மனநிலையை வளர்த்துக்கொள்ளவில்லை என்று நான் நினைக்கிறேன். நமது பொருளாதாரம் குறுகிய காலத்துக்கும், நடுத்தர காலத்துக்கும், நீண்ட காலத்துக்கும் செயல்படும் விதமான திட்டம் தற்போது தேவைப்படுகிறது. 

ஆனால், அதுபோன்ற ஒரு கொள்கை இன்று நம்மிடம் இல்லை. அதுமட்டுமல்லாமல், பிரதமரிடம் உண்மையை உரக்கச் செல்ல அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ள பொருளாதார வல்லுநர்கள் அஞ்சுகின்றனர்.  அதே நேரத்தில் பிரதமர் மோடி, ஏழைப் பெண்களுக்கு சமையல் எரிவாயு வழங்கும் உஜ்வாலா போன்ற சிறிய திட்டங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். ஆனால் பொருளாதார முன்னேற்றத்துக்கு பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய பலதரப்பு அணுகுமுறை தேவைப்படுகிறது.

1991-ஆம் ஆண்டு பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள மன்மோகன் சிங் தலைமையிலான நிதி அமைச்சகத்தின் மூலமாகத் தான் பி.வி.நரசிம்ம ராவின் "புத்திசாலித்தனமாக" செயல்பட்டார். எனவே பொருளாதாரத்தில் தேர்ச்சி பெற்ற ஒரு பிரதமரைக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு நிதி அமைச்சராக இருந்ததைப் போலவே பிரதமராக இருந்த போது மன்மோகன் சிங்கால் எதுவும் செய்ய முடியவில்லை. 1991-ல் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களின் 95 சதவீத வெற்றி நரசிம்ம ராவ்-ஐ சேரும். எனவே மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ்-க்கு அடுத்த குடியரசு தினத்தில் பாரத ரத்னா வழங்கி கௌரவிக்க வேண்டும்.

ஹார்வர்ட் பொருளாதாரப் பல்கலை.யில் தோல்வியுற்ற ஒரு மாணவன் என்பதை தவிர முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. வருமான வரியை ஒழிப்பதற்கான எனது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறேன். இதனால் நமது வீட்டிலும், நாட்டிலும் சேமிப்பு உயர்ந்து, சிறந்த வளர்ச்சிக்கு வழிவகுக்கும். மேலும் வரி மதிப்பீடுகளுடன் தொடர்புடைய ஊழலையும் குறைக்கும்.

நேர்மையான வரி செலுத்துவோர் மத்தியில் கூட அவர்கள் வருமானவரி சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்ற அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் ஊழல் பெருகும் அபாயம் ஏற்படும். பணக்காரர்கள், ஏழைகள் மற்றும் விவசாயிகள் வரி செலுத்துவதில் இருந்து விலகி இருக்கும்போது, ​​நடுத்தர மக்கள் தான் அதிக நுகர்வு திறன் காரணமாக பொருளாதாரத்தின் முக்கியமானவர்களாக இருந்தபோதிலும் அதிகபட்ச வரிச்சுமையை தாங்குகின்றனர் என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Friends Track CALL TAXI & CAB (P) LTD

Black Forest Cakes


Anbu CommunicationsThoothukudi Business Directory