» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தமிழ் மொழியின் பெருமையை உணராததற்காக வெட்கப்படுகிறேன்: ஆனந்த் மஹிந்திரா ட்வீட்!

திங்கள் 30, செப்டம்பர் 2019 5:04:45 PM (IST)

உலகின் மூத்த மொழியான தமிழ் மொழியின் பெருமையை உணராததற்காக வெட்கப்படுகிறேன் என்று மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐ.நா. பொதுச் சபையின் 74-ஆவது கூட்டத்தில், பேசிய பிரதமர் மோடி, யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று தமிழ்க் கவிஞர் கணியன் பூங்குன்றனாரின் கூற்றை மேற்கோள் காட்டிப் பேசினார். மேலும்  உலகின் தொன்மையான மொழி தமிழ் என்று எடுத்துரைத்தார். இதைத்தொடர்ந்து இன்று சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி, உலகின் மிக மூத்த மொழியான தமிழ் மொழி பேசும் மாநிலத்தில், நாம் தற்போது இருக்கிறோம் என்று குறிப்பிட்டார். 

இந்நிலையில் மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், ஐ.நாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உலகின் தொன்மையான மொழி தமிழ் என்று குறிப்பிட்டார். அதுவரை தமிழ் பழமையான மொழி என்று நான் உணரவில்லை. தமிழ் மொழியின் பெருமையை உணராமல் இருந்ததற்காக நான் வெட்கப்படுகிறேன். தமிழ் மொழியின் முக்கியத்துவத்தையும், பெருமையையும் இந்தியா முழுவதும் நாம் பரப்ப வேண்டும். 

நான் ஊட்டியில் ஒரு உறைவிடப் பள்ளியில் படித்தேன். அங்கு நான் தமிழைப் படித்திருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, எனது பள்ளித் தோழர்களிடமிருந்து, துஷ்பிரயோகம் செய்யும் ஒரு சில தேர்வு வார்த்தைகளை மட்டுமே நான் கற்றுக்கொண்டேன். இது தமிழ் பேசும் எனது குழுவின் உறுப்பினர்களை வெட்கப்பட வைக்கிறது என்று பதிவிட்டுள்ளார். 


மக்கள் கருத்து

குமார்Oct 1, 2019 - 11:31:04 AM | Posted IP 162.1*****

தமிழின் பெருமையை உலகம் அறிய செய்த பிரதமர் அவர்களுக்கு நன்றி....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam

Anbu Communications


Black Forest Cakes

CSC Computer Education
Thoothukudi Business Directory