» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கேரளத்தில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு

வெள்ளி 20, செப்டம்பர் 2019 3:25:01 PM (IST)



கேரளத்தில்  நகை கடை ஊழியர்கள் 6 பேர் சேர்ந்து வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ரூ.12 கோடி பரிசு விழுந்துள்ளது.

கேரளத்தில் அரசு சார்பில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகை காலங்களில் பம்பர் குலுக்கல்களும் நடத்தப்படுகிறது. ஓணம் பண்டிகையையொட்டி முதல் பரிசு ரூ.12 கோடி என்ற சிறப்பு லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்பட்டது. இந்த டிக்கெட்டின் விலை ரூ.300 ஆகும். நேற்று இந்த லாட்டரி சீட்டு குலுக்கல் நடத்தப்பட்டு பரிசு பெற்றவர்கள் விவரமும் அறிவிக்கப்பட்டது. ரூ.12 கோடி பரிசு என்பதால் அந்த அதிர்ஷ்டசாலி யார்? என்பதை அறியும் ஆவல் அனைவரிடமும் ஏற்பட்டது. தற்போது முதல் பரிசு பெற்றவர்கள் 6 நண்பர்கள் என்பது தெரிய வந்துள்ளது. 

திருச்சூர் மாவட்டம் கருநாகப்பள்ளியில் உள்ள ஒரு நகை கடையில் ஊழியராக பணிபுரியும் ரோனி, சுபின் தோமஸ், ரெதீஷ், ராஜீவன், ரெதீஷ் குமார், ஜார்ஜ் ஆகிய 6 பேரும் நண்பர்கள் ஆவார்கள். இவர்கள் 6 பேரும் ஓணம் பண்டிகைக்காக ஊருக்கு புறப்பட்டு சென்றபோது அந்த பகுதியில் உள்ள சிவன் குட்டி என்ற லாட்டரி விற்பனையாளரிடம் ரூ.300 கொடுத்து அனைவரும் சேர்ந்து லாட்டரி சீட்டை வாங்கி உள்ளனர். அந்த லாட்டரி சீட்டுக்கு தான் முதல் பரிசு கிடைத்துள்ளது. பரிசு தொகை ரூ.12 கோடி என்றாலும் வருமான வரி, ஏஜெண்டு ஊக்கத்தொகை போக பரிசு பணமாக ரூ.7 கோடியே 56 லட்சம் கிடைக்கும்.பரிசு கிடைத்த மகிழ்ச்சியில் உள்ள அந்த 6 நண்பர்களும் தங்களுக்கு கிடைத்த பரிசு பணத்தில் ஒரு சதவீதத்தை கேரள புற்றுநோய் ஆஸ்பத்திரிக்கு வழங்கப்போவதாக கூறி உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education


Anbu Communications

Nalam Pasumaiyagam

Black Forest Cakes






Thoothukudi Business Directory