» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பாலியல் பலாத்கார வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தா கைது!!

வெள்ளி 20, செப்டம்பர் 2019 12:54:26 PM (IST)

பாலியல் பலாத்கார வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தாவை, சிறப்பு விசாரணைக் குழு கைது செய்தது.

உத்தர பிரதேசம் மாநிலத்தின் ஷாஜகான்பூர் பகுதியைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி ஒருவர், பா.ஜ.க. தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுவாமி சின்மயானந்தாவுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தன் வழிகாட்டுதலின்படி விசாரணை நடந்து வருகிறது. புகார் அளித்த மாணவியிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை 11 மணி நேரம் சிறப்பு விசாரணைக்குழு (எஸ்ஐடி) விசாரணை நடத்தியது. 

அதன்பின்னர் சின்மயானந்தாவின் கல்லூரிகளில் பணியாற்றி வரும் 2 முதல்வர்களிடம்  விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து  சின்மயானந்தாவிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்தியது. இந்நிலையில், சிறப்பு விசாரணைக் குழுவினர் இன்று ஷாஜகான்பூரில் உள்ள சின்மயானந்தாவின் வீட்டுக்குச் சென்று அவரை கைது செய்தனர்.  பின்னர் அவரை உடனடியாக மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சின்மயானந்தா கைது செய்யப்பட்டதையொட்டி  அவரது வீடு மற்றும், அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படும் அரசு மருத்துவமனை ஆகிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes



Nalam Pasumaiyagam


Anbu Communications



Thoothukudi Business Directory