» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

குடியரசுத் துணைத் தலைவருடன் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சந்திப்பு

செவ்வாய் 17, செப்டம்பர் 2019 10:27:49 AM (IST)



குடியரசுத் துணைத் தலைவர் எம். வெங்கய்ய நாயுடுவை தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்  டெல்லியில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

தமிழக பாஜக தலைவராக இருந்து வந்த டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், அண்மையில் தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.  இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 8-ஆம் தேதி அவர் ஆளுநராகப் பதவியேற்றுக் கொண்டார். ஆளுநராகப் பதவியேற்ற பிறகு முதல் முறையாக டெல்லிக்கு நேற்றுவந்த அவர், குடியரசுத் துணைத் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடுவை சந்தித்தார். 

பின்னர் அவர் தெலங்கானா இல்லத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஆளுநராகப் பதவி ஏற்ற நிலையில், குடியரசுத் துணைத் தலைவரிடம் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெறுவதற்காக டெல்லி வந்தேன். அவர் 20-ஆம் தேதி தெலங்கானாவுக்கு வரும் திட்டம் உள்ளது. அதற்கு முன்பாக அவரை நேரில் சந்தித்து ஆசி பெற வந்தேன்.நெகிழிப் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில், தெலங்கானா ஆளுநர் மாளிகையில் காகிதப் பைகளைப் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஊடகத்தினரும் நெகிழி பயன்பாட்டைத் தவிர்ப்பதுடன் அதற்கான விழிப்புணர்வை மக்களிடம் அதிகம் ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education


Nalam Pasumaiyagam

Anbu Communications


Black Forest Cakes




Thoothukudi Business Directory