» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கமலும் ஸ்டாலினும் ஊளையிடுகிறார்கள் : ஹிந்தி எதிர்ப்பு குறித்து சு. சுவாமி விமர்சனம்

திங்கள் 16, செப்டம்பர் 2019 4:15:07 PM (IST)

கமலும் ஸ்டாலினும் ஊளையிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று ஹிந்தி எதிர்ப்பு குறித்து பாஜக மூத்த தலைவரான சுப்பிரமண்ய சுவாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்தி தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தேசியத் தலைவருமான அமித்ஷா ட்விட்டரில் விடுத்துள்ள செய்தியில், இந்தியாவில் பல மொழிகள் உள்ளன. ஒவ்வொரு மொழியும் தனிச் சிறப்பு வாய்ந்தவை. ஆனால், உலகளவில் இந்தியாவின் அடையாளமாக ஒரு பொதுமொழி இருக்க வேண்டியது அவசியம். தற்போது நாட்டை ஒன்றிணைக்கும் திறன் வாய்ந்த மொழி ஒன்று உண்டென்றால், அது நாடு முழுவதும் பரவலாக பேசப்படும் இந்தி மொழிதான். எனவே, அதை தேசிய மொழியாக்க வேண்டும். மகாத்மா காந்தி, சர்தார் படேல் ஆகியோரின் கனவை நிறைவேற்ற இந்திய மக்கள் தங்கள் தாய் மொழியையும், இந்தியையும் முன்னேற்ற வேண்டும் என நான் விரும்புகிறேன் என்று கூறியிருந்தார்.

அவரது இந்தக் கருத்துக்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு எதிராக இரண்டாவது மொழிப் போராட்டம் நடத்தப்படும் என்று தீவிரமாக விமர்சித்திருந்தார். அதேசமயம் நாடு குடியரசான போது அரசு செய்து கொடுத்த சத்தியத்தை எந்த ஷாவோ மாற்ற முயற்சிக்க கூடாது என்று மத்திய பாஜக அரசை மநீம கட்சித் தலைவர் கமல்ஹாசன், தனது ட்விட்டர் பக்கத்தில் விடியோ ஒன்றின் மூலம் விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் கமலும் ஸ்டாலினும் ஊளையிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று ஹிந்தி எதிர்ப்பு குறித்து பாஜக மூத்த தலைவரான சுப்பிரமண்ய சுவாமி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: கயவன் கமல் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் இருவரும் ஹிந்தித் திணிப்பு என்று ஊளையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஹிந்தி கற்பிக்க கூடாது என்று  அவர்கள் திணிப்பதை என்னவென்று சொல்வது? முதலில் ஹிந்தியை மூன்றாவது மொழியாக தேர்வு செய்து கொள்ளும் வகையில் கொடுக்கலாம். எதைத் தேர்வு செய்து கொள்வது என்பது மாணவர்களின் முடிவாக இருக்கட்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். 


மக்கள் கருத்து

நான்Sep 17, 2019 - 08:00:50 PM | Posted IP 162.1*****

பாரத நாடு பைந்தமிழ் நாடு ஐயா. நினைவில் கொள்க. அண்ணல் அம்பேத்கார் போன்றோர் இதனை உறுதி செய்துள்ளனர்.

ராமநாதபூபதிSep 17, 2019 - 10:02:54 AM | Posted IP 162.1*****

இதே கருத்தை தமிழ்நாட்டில் நீ ஒரு மீட்டிங் போட்டு பேசு. அப்போ ஊளை இடுவது யாருன்னு தெரியும்

பாலாSep 16, 2019 - 11:18:36 PM | Posted IP 173.2*****

சு... சா நீ ஊளையிடாதே...

என் பெயர் தமிழ்Sep 16, 2019 - 09:13:35 PM | Posted IP 162.1*****

டேய் சொரிமுத்து... ஊளையிடாத... போ போ

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications

CSC Computer Education


Nalam PasumaiyagamBlack Forest CakesThoothukudi Business Directory