» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தி நாட்டை ஒன்றிணைக்கிறது என்ற கூற்று அபத்தம் : அமித் ஷாவுக்கு பினராயி விஜயன் பதிலடி

ஞாயிறு 15, செப்டம்பர் 2019 10:16:42 PM (IST)

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தி மொழி குறித்து தெரிவித்திருந்த கருத்து இந்தியாவில் பிற மொழிகள் பேசும் மக்களுக்கு எதிரான போர்க்குரல் போன்றது என கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய அரசியல் நிர்ணய சபையானது கடந்த 1949-ம் ஆண்டு செப்டம்பர் 14-ந்தேதி, இந்திக்கு அலுவல் மொழி அந்தஸ்தை வழங்கியதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 14-ம் தேதி இந்தி தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான இந்தி தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாட்டு மக்களுக்கு ‘டுவிட்டர்’ மூலம் வாழ்த்து தெரிவித்து இருந்த உள்துறை அமைச்சர் அமித்‌ ஷா,

சர்வதேச அளவில் நமது நாட்டை அடையாளப்படுத்த இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று கூறிஇருந்தார். இதற்கு தமிழகத்தைச் சேர்ந்த பல தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் டுவிட்டர் பக்கத்தில் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அதில், "இந்தி நம் நாட்டை ஒன்றிணைக்கிறது என்ற கூற்று அபத்தமானது. அந்த மொழி பெரும்பான்மையான இந்தியர்களின் தாய்மொழி அல்ல. அவர்கள் மீது இந்தியை திணிப்பது அவர்களை அடிமைப்படுத்துவது போன்றதாகும். மத்திய அமைச்சரின் அறிக்கை இந்தி அல்லாத பிற மொழிகளை தங்கள் தாய்மொழியாக கொண்ட மக்களுக்கு எதிரான போர்க்குரல் என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக பினராயி விஜயன், தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் அமித் ஷாவின் கருத்திற்கு எதிராக தனது கருத்தை பதிவிட்டிருந்தார். அதில்இந்தி மொழியை திணிக்க முயல்வதன் மூலம் ”சங் பரிவாரத்தினர்” மொழியின் பெயரில் ஒரு புதிய போர்க்களத்தை உருவாக்குகிறார்கள் என்று தெரிவித்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu Communications


Black Forest CakesFriends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory