» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தொழில் முனைவோருக்கு கஷ்டகாலம் விரைவில் மாறிவிடும்: நிதின் கட்காரி ஆறுதல்

ஞாயிறு 15, செப்டம்பர் 2019 9:55:56 PM (IST)

தொழில் முனைவோருக்கு மிகவும் கஷ்டமான காலம் இது என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் இந்த கஷ்டகாலம் விரைவில் மாறிவிடும். தொழில் முனைவோர் மனம் தளரக் கூடாது என மத்திய குறுந்தொழில் சிறுதொழில் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் நிதின் கட்காரி இன்று தெரிவித்தார்.

தொழில் முனைவோர் சங்கத்தின் 65ஆவது ஆண்டு விழாவை ஒட்டி நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் மத்திய எம்.எஸ்.எம்.இ. அமைச்சர் நிதின் கட்காரி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதன் விவரம்:தொழில் நிறுவனங்கள் மிகவும் கஷ்டமான காலத்தை காலத்தில் உள்ளன என்பதை நானறிவேன். நாம் நம்முடைய வளர்ச்சி வீதத்தை அதிகரிக்க விரும்புகிறோம். சமீபத்தில் மோட்டார் வாகன உற்பத்தியாளர்களின் அகில இந்திய மாநாட்டில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. அங்கு மோட்டார் வாகன உற்பத்தியாளர்களை நான் சந்தித்து பேசினேன். அவர்கள் பெரிதும் கவலை தெரிவித்தனர்.

அவர்களிடம் நான் கூறியதை உங்களிடம் தெரிவிக்க விரும்புகிறேன். எல்லா நேரமும் ஒரே மாதிரியான நேரமாக அமைவதில்லை சில நேரங்களில் நமக்கு சந்தோஷம் வரும், சில நேரங்களில் தூக்கமும் வரும், சில நேரங்களில் நாம் வெற்றிபெறுவோம், சில நேரங்களில் நாம் தோல்வி அடைவோம், இதுதான் வாழ்க்கை! இதுதான் வாழ்க்கை சக்கரம்! எனவே உங்கள் வாழ்க்கையிலும் கூட உலக பொருளாதார நிலைமை காரணமாக சிக்கல் தோன்றியுள்ளது.

கூட உலக பொருளாதார நிலைமை காரணமாக, இந்திய வர்த்தக சுழற்சியிலும் இந்திய தொழில்துறை வளர்ச்சியிலும் சில சிக்கல்களை நாம் சந்திக்க நேரிடுகிறது. உலகத்தில் உள்ள மற்ற நாடுகளும் இதே மாதிரியான பிரச்சனைகளை சந்தித்து வருகின்றன. எனவே நீங்கள் ஏமாற்றம் அடைவதற்கு இடமில்லை. இந்த கஷ்டமான காலம் விரைவில் மாறும், அடுத்து வரும் காலத்தில் நம்முடைய பொருளாதாரம் விரைவாக வளர்ச்சியடையும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு மத்திய எம்.எஸ்.எம்.இ. அமைச்சர் நிதின் கட்காரி பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Nalam Pasumaiyagam


Anbu Communications

CSC Computer Education

Thoothukudi Business Directory