» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

போக்குவரத்து விதிமீறல் அபராதத் தொகையை மாநில அரசுகள் குறைத்துக் கொள்ளலாம்: நிதின் கட்கரி

புதன் 11, செப்டம்பர் 2019 5:33:53 PM (IST)

போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத்தொகையை மாநில அரசுகள் விரும்பினால் குறைத்துக் கொள்ளலாம் என்று மத்திய அமைச்சர்  நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்தும் வகையில், அதற்கான அபராத கட்டணத்தை 10 மடங்கு வரை உயர்த்தி புதிய மோட்டார் வாகன சட்டம் கொண்டுவரப்பட்டது.  சாலை விதிகளை மீறுவோர் மீது தற்போது போலீசார் புதிய விதிகளின் படியே அபராதம் விதித்து வருகின்றனர். அபராதம் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து மேற்கு  வங்கம், மத்தியப் பிரதேசம், பஞ்சாப் உட்பட 6 மாநிலங்கள் மத்திய அரசின்  இந்த உத்தரவை அமல்படுத்துவதை நிறுத்தி வைத்துள்ளன. குஜராத்தில் புதிய அபராத தொகை வசூலிப்பது அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து  குஜராத்  மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதையடுத்து அபராதத் தொகையை குறைத்து குஜராத் அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், மாநில அரசுகள் விரும்பினால் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகையை குறைத்து கொள்ளலாம் என மத்திய அமைச்சர்  நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். சாலை விதிகளை இளைஞர்கள் மதிப்பதில்லை, விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்பை தவிர்க்கவே அபராதம் உயர்த்தப்பட்டது. அரசின் வருவாயை பெருக்குவதற்காக உயர்த்தவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து

அருண்Sep 13, 2019 - 09:42:47 AM | Posted IP 106.1*****

மொதல்ல பாணிபூரி வாயனுங்களை ட்ரைன்ல டிக்கெட் எடுக்க சொல்லுயா.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes
Anbu Communications


Thoothukudi Business Directory