» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பரூக் அப்துல்லா எங்கே..? உச்சநீதிமன்றத்தில் வைகோ ஆட்கொணர்வு மனு தாக்கல்

புதன் 11, செப்டம்பர் 2019 3:27:41 PM (IST)

தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லாவுக்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் கடந்த ஒரு மாதமாக அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்டோர் வெளி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இதுவரை அனுமதி தரப்படவில்லை. இதேபோல் ராகுல், குலாம் நபி ஆசாத் போன்ற அரசியல் கட்சித் தலைவர்களும் திருப்பி அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் கூட மெகமூபா முப்தியின் மகள் இல்திஜா முப்தி தனது அம்மாவை பார்க்க உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து அனுமதி பெற்றார். இந்நிலையில் பரூக் அப்துல்லாவை தொடர்புகொள்ள முடியவில்லை எனக் கூறி வைகோ உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை இன்று தாக்கல் செய்துள்ளார்.அதில் மதிமுக சார்பில் செப்.15-ம் தேதி சென்னையில் நடைபெறும் அண்ணா பிறந்த நாள் விழா மாநாட்டில் பரூக் அப்துல்லா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொள்ள ஒப்புக்கொண்டுள்ளதாகவும், இந்நிலையில் காஷ்மீரில் நிலவும் அசாதாரண சூழலால் அவரை தங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் தெரிவித்திருக்கிறார்.வைகோ தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை உச்சநீதிமன்றம் விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

saikoSep 11, 2019 - 04:27:03 PM | Posted IP 108.1*****

Govt trying to bring peace in Kashmir valley, these culprits wants to disturb the same- Really shame Mr.Vaigo. You are not a politician, just a fool. that's all I want to say.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu Communications

Black Forest CakesThoothukudi Business Directory