» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
சாலைகளில் இறந்து கிடந்த 90 நாய்கள்: மஹாராஷ்டிராவில் பரபரப்பு
செவ்வாய் 10, செப்டம்பர் 2019 4:13:03 PM (IST)
மஹாராஷ்டிராவில் சாலைகளில் ஆங்காங்கே சுமார் 90 நாய்கள் இறந்துகிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம், புல்தானா மாவட்டத்தில், கிர்டா-சவல்டபரா சாலையில் ஆங்காங்கே நாய்கள் இறந்துகிடந்துள்ளன. சுமார் 100 நாய்கள் சாலைகளில் வீழ்ந்து கிடந்ததாகவும் அவைகளில் 90 நாய்கள் உயிரிழந்த நிலையில் கிடந்ததாகவும் கூறப்படுகிறது.
கொல்லப்பட்ட நாய்கள் அனைத்தும் சங்கிலியாலும், கயிறுகளால் அதன் கால்களை இறுக்கியும் கொல்லப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். இதனைத் தொடர்ந்து மிருகவதை தடுப்புச் சட்டம் 1960-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வேளாண் சட்டங்கள் தொடர்பான 9ஆம் கட்டப் பேச்சுவார்த்தையும் தோல்வி
வெள்ளி 15, ஜனவரி 2021 6:41:02 PM (IST)

விவசாயிகள் மரணத்தைப் பற்றி மத்திய அரசுக்கு கவலை இல்லை : ராகுல்காந்தி விமர்சனம்
புதன் 13, ஜனவரி 2021 5:01:14 PM (IST)

கரோனா அச்சுறுத்தல் : குஜராத் கோயில்களில் விழுந்து சுவாமி கும்பிட தடை
புதன் 13, ஜனவரி 2021 4:55:04 PM (IST)

சபரிமலை மகரஜோதி தரிசனத்திற்கு 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி : தேவசம் போர்டு
செவ்வாய் 12, ஜனவரி 2021 5:19:41 PM (IST)

வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத்தடை: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செவ்வாய் 12, ஜனவரி 2021 4:35:26 PM (IST)

கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை ரூ. 200: சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா அறிவிப்பு
திங்கள் 11, ஜனவரி 2021 8:37:20 PM (IST)
