» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தெலங்கானா மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பதவியேற்பு

ஞாயிறு 8, செப்டம்பர் 2019 1:22:19 PM (IST)தெலங்கானா மாநில முதல் பெண் ஆளுநராக தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். 

கடந்த ஞாயிற்றுக்கிழமை குடியரசுத் தலைவர் மாளிகை தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜனை தெலங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்துள்ளது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

இந்நிலையில், தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் இன்று ஞாயிற்றுக்கிழமை (செப் 8) 11 மணியளவில் பொறுப்பேற்றார். அவருக்கு அந்த மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரகுவேந்திர சிங் சௌகான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.பதவியேற்ற பின்னர் பின்னர், தனது தந்தை குமரி அனந்தன், தாயின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதல்வர் சந்திரசேகர ராவ், அம்மாநில அமைச்சர்கள், உயரதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், தமிழிசை சௌந்தரராஜனின் குடும்பத்தினர், தமிழக பாஜக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.  தமிழக அரசின் சார்பில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பி.தங்கமணி, வேலுமணி ஆகியோரும், தேமுதிக பொருளாளர் பிரேமலதா, சுதீஷ், ஏ.சி.சண்முகம், சரத்குமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். 


மக்கள் கருத்து

மனிதன்Sep 10, 2019 - 07:14:42 PM | Posted IP 173.2*****

வாழ்த்துக்கள் அக்கா .

saamiSep 9, 2019 - 05:09:39 PM | Posted IP 173.2*****

vaalthukkal

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes

Anbu CommunicationsThoothukudi Business Directory