» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஏர் இந்தியா ரூ.5ஆயிரம் கோடி எரிபொருள் கட்டணம் பாக்கி : எண்ணெய் நிறுவனங்கள் குற்றச்சாட்டு

சனி 24, ஆகஸ்ட் 2019 12:54:03 PM (IST)

கடந்த எட்டு மாதங்களாக எரிபொருள் கட்டண பாக்கியை செலுத்தாமல், ஏர் இந்தியா நிறுவனம் ரூ.5,000 கோடியை நிலுவை வைத்திருப்பதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் குற்றம்சாட்டியுள்ளது.

நிலுவைத் தொகையை வசூலிக்க கடுமையான நடவடிக்கை எடுத்திருக்கும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை, கடந்த வியாழக்கிழமை முதல் இந்தியாவில் உள்ள 6 முக்கிய விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு எரிபொருள் வழங்குவதை நிறுத்தியுள்ளன.

அதாவது கொச்சி, புனே, பாட்னா, ராஞ்சி, விசாகப்பட்டினம், மொஹாலி ஆகிய விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு எரிபொருள் வழங்கும் சேவையை பெட்ரோலியம் நிறுவனங்கள் நிறுத்திவிட்டன. பெட்ரோலியம் நிறுவனங்கள் இணைந்து கூட்டாக இந்த முடிவை எடுத்துள்ளன. சுமார் 8 மாதங்களாக எரிபொருள் கட்டணத்தை செலுத்தாததால், இன்னும் 3 மாதங்களுக்குள் ரூ.5000 கோடியை செலுத்த வேண்டும் என்று பெட்ரோலியம் நிறுவனங்கள் ஏர் இந்தியாவுக்கு காலக்கெடுவும் நிர்ணயித்துள்ளன. இது குறித்து ஏர் இந்தியாவுக்கு கடிதம் வாயிலாகவும் எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu CommunicationsThoothukudi Business Directory