» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பீகார் முன்னாள் முதல்வர் ஜெகந்நாத் மிஸ்ரா உடல்நலக்குறைவால் மரணம்

திங்கள் 19, ஆகஸ்ட் 2019 8:41:33 PM (IST)

பீகார் மாநில முன்னாள் முதல்வரான ஜெகந்நாத் மிஸ்ரா(82) உடல்நலக்குறைவால் திங்களன்று மரணமடைந்தார்.

1970-களில் பிகார் மாநில காங்கிரஸில் முக்கியமான தலைவர்களில் ஒருவர் ஜெகந்நாத் மிஸ்ரா. அரசியலில் இறங்கிய பின்னர் பிகார் மாநில முதல்வராக 1975, 1980 மற்றும் 1989 ஆகிய மூன்று காலகட்டங்களில் பணியாற்றியுள்ளார். பின்னர் காங்கிரசில் இருந்து விலகி தேசியவாத காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளில் செயல்பட்டார்.

வயதான பின்னர் புற்றுநோய் உள்ளிட்ட உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்த அவர் தில்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் இன்று மரணமடைந்தார். இவருக்கு  நிதிஷ் மிஸ்ரா என்றொரு மகன் இருக்கிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Anbu Communications
Thoothukudi Business Directory