» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மே.இ.தீவுகளில் மிரட்டல் எதிரொலி: இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பலத்த பாதுகாப்பு

திங்கள் 19, ஆகஸ்ட் 2019 12:05:15 PM (IST)

மேற்கிந்தியத் தீவுகள் சென்ற இந்திய அணிக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் தொலைபேசி அழைப்பு பிசிசிஐக்கு வந்ததையடுத்து, இந்திய அணி வீரர்களுக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்தியத் தீவுகள் நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்று விளையாடி வருகிறது. டி20,ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்ட நிலையில், வரும் 22-ம் தேதி முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. அதற்கான தீவிரப் பயிற்சியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மே.இ.தீவுகள் ஏ அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இந்திய அணி வீரர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் தொலைபேசி அழைப்பு பிசிசிஐக்கு கிடைத்துள்ளதாகத் தெரிகிறது. 

இதையடுத்து, இந்தியத் தூதர் மூலம், மேற்கிந்தியத் தீவுகளில் இருக்கும் இந்திய அணி வீரர்களுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அந்த அதிகாரி கூறுகையில், "இந்திய வீரர்களுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் சில தொலைபேசி அழைப்புகள் வந்தன. அதை சாதாரணமாக எடுக்க விரும்பவில்லை. அதனால், மேற்கிந்தியத் தீவுகளில் இருக்கும இந்திய அணிக்குப் பாதுகாப்பை அதிகப்படுத்த கேட்டுக்கொண்டிருக்கிறோம். இந்திய அணிக்கு கூடுதலாக ஒரு பைலட் படை பாதுகாப்பு, கூடுதல் கண்காணிப்புடன் கூடிய பாதுகாவலர்களை ஏற்பாடு செய்யும்படி இந்தியத் தூதரிடம் கேட்டுக்கொண்டோம்.அதை ஏற்று இந்தியத் தூதரும் ஆன்டிகுவா அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். இந்திய அணிக்கு முன்னெச்சரிக்கையாக கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது" எனத் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Black Forest Cakes


Friends Track CALL TAXI & CAB (P) LTD


Thoothukudi Business Directory