» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் தொலைத்தொடர்பு சேவை விரைவில் செயல்பாட்டுக்கு வரும்: விஜயகுமார் பேட்டி

ஞாயிறு 18, ஆகஸ்ட் 2019 9:46:51 PM (IST)

ஜம்மு-காஷ்மீரில் தொலைத்தொடர்பு சேவை விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என ஜம்மூ-காஷ்மீர் ஆளுநரின் ஆலோசகர் விஜயகுமார் தெரிவித்துள்ளார். 

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை நீக்கிய பிறகு, பாதுகாப்பு காரணங்களுக்காக மாநிலம் முழுவதும் கடந்த 5 ஆம் தேதி முதல் கடும் கட்டுப்பாடுகளையும், தடைகளையும் மத்திய அரசு விதித்தது; முன்னாள் முதல்வர்கள் மெஹபூபா முஃப்தி, ஒமர் அப்துல்லா ஆகியோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். தொலைபேசி சேவைகளுக்கும், இணையதளச் சேவைகளுக்கும், செய்தி தொலைக்காட்சிகளுக்கும் தடை போன்ற காரணங்களலால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. 

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்த 2 வாரங்களில், மாநிலத்தில் படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு ஒவ்வொரு நாளும் அங்குள்ள நிலைமையில் முன்னேற்றம் காணப்பட்டு இயல்புநிலை திரும்பியது. பெரும்பாலான பகுதிகளில் 144 தடை உத்தரவு நீக்கப்பட்டது. சில மாவட்டங்களில் மட்டுமே தடை உத்தரவுகள் அமலில் இருந்து வந்தன. ஜம்முவின் 5 மாவட்டங்களில் 2ஜி இணையச் சேவை அனுமதிக்கப்பட்டது. 

இந்நிலையில், காஷ்மீரின் ஸ்ரீநகரின் பல்வேறு இடங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை திடீரென வன்முறை சம்பவங்கள், கல்வீச்சு சம்பவங்கள் நடந்தேறியது. இதையடுக்கு அங்கு மீண்டும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டியிருப்பதால், அத்தியாவசிய தடுப்பு நடவடிக்கையாகவும், தகவல்தொடர்பு சேனல்களை தவறாக பயன்படுத்தக்கூடாது என்பதற்காகவே முன்னெச்சரிக்கையாக தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. விரைவில் ஜம்மு-காஷ்மீரில் தொலைத்தொடர்பு சேவை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதில் நாங்களும் ஆர்வமாக உள்ளோம். விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வருவோம். மேலும் அரசின் நோக்கம் என்ன என்பதை காஷ்மீர் மக்களுக்கு தெளிவுப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜம்மு-காஷ்மீர் ஆளுநரின் ஆலோசகர் விஜயகுமார் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam

Black Forest Cakes

CSC Computer Education
Anbu CommunicationsThoothukudi Business Directory