» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஸ்ரீநகரில் மீண்டும் வன்முறை; செல்போன் சேவை ரத்து: மக்கள் நடமாட்டத்துக்கு கட்டுப்பாடுகள்

ஞாயிறு 18, ஆகஸ்ட் 2019 9:39:41 PM (IST)

ஸ்ரீநகரில் மீண்டும் வன்முறை ஏற்பட்டுள்ளதால் கட்டுப்பாடுகள் அமல் செய்யப்பட்டுள்ளது, செல்போன் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கம் மற்றும் அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிப்பு போன்ற நடவடிக்கைகளால், பாதுகாப்பு காரணங்களுக்காக மாநிலம் முழுவதும் கடந்த 5-ந்தேதி முதல் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. ஊரடங்கு, 144 தடை உத்தரவு, தொலைதொடர்பு சேவை ரத்து போன்ற கட்டுப்பாடுகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. இந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்து சுமார் 2 வாரங்கள் ஆகியுள்ள நிலையில் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பு நிலை திரும்பியது. எனவே அந்த பகுதிகளில் கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டு வந்தது. 

காஷ்மீரில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் ஜம்மு பிராந்தியத்துக்கு உட்பட்ட 5 மாவட்டங்களில் இணையதள சேவைகள் மீண்டும் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் காஷ்மீரின் ஸ்ரீநகரில் இன்று பல்வேறு இடங்களில் திடீர் வன்முறை சம்பவங்களும், கல்வீச்சு சம்பவங்களும் நடந்துள்ளது. இதனால் மீண்டும் நடமாட்டத்துக்கான கட்டுப்பாடுகளை பாதுகாப்பு படையினர் விதித்துள்ளனர்.வெள்ளிக்கிழமை 5 மாவட்டங்களில் மிகக்குறைந்த அலைவரிசை கொண்ட 2ஜி செல்போன் சேவை அனுமதிக்கப்பட்டது. அங்கு பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டுள்ளது. இதனால் செல்போன் தொடர்பு சேவையையும் பாதுகாப்பு அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications






Thoothukudi Business Directory