» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வேலை வாய்ப்பின்மை, வறுமை, பொருளாதார நெருக்கடி அதிகரிக்கும்: மாயாவதி எச்சரிக்கை

ஞாயிறு 18, ஆகஸ்ட் 2019 10:03:04 AM (IST)

பொருளாதார நெருக்கடி அதிகரிக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். மாயாவதி டுவிட்டரில்,”வேலை வாய்ப்பின்மை, வறுமை, விலைவாசி உயர்வு, கல்வி அறிவின்மை, வன்முறைகள், சுகாதாரம் என பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில், நாடு முழுவதும் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வரும் அச்சுறுத்தல் தற்போது ஏற்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,”வர்த்தக சமூகத்தினர் மனம் தளர்ந்து வருத்தத்தில் உள்ளனர். வேலை இழப்புகளால், அவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளுப்படுகின்றனர். இதை மத்திய அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்” என்று மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து

samiAug 18, 2019 - 04:47:25 PM | Posted IP 162.1*****

"வர்த்தக சமூகத்தினர் மனம் தளர்ந்து வருத்தத்தில் உள்ளனர்"- ஆமாம் வரியை ஒழுங்கா கட்டச்சொன்னா வருத்தமாகத்தான் இருக்கும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTD
Black Forest Cakes

Anbu CommunicationsThoothukudi Business Directory