» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ராணுவ பயிற்சி நிறைவு: டெல்லி திரும்பினார் தோனி

சனி 17, ஆகஸ்ட் 2019 5:16:53 PM (IST)

காஷ்மீரில் ராணுவத்தினருடன் இணைந்து ரோந்து பணி சென்ற இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி இன்று பயிற்சி முடிந்து டெல்லி திரும்பினார்.

உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்திற்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா தோல்வியடைந்தது. இதையடுத்து தோனியை நீக்க வேண்டும் என ஒரு தரப்பினர் வலியுறுத்தினர். தோனியின் எதிர்காலம் குறித்த ஊகங்கள் தீவிரமடைந்தன. வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணத்திற்கான இந்திய அணியை பிசிசிஐ தேர்வு செய்தவுடன், தோனியின் எதிர்கால திட்டங்கள் குறித்த தெளிவான தகவல்கள் கிடைக்கும் என கூறப்பட்டது. இதற்கிடையே, தோனி, துணை ராணுவ படைப்பிரிவுக்கு சேவை செய்ய விளையாட்டிலிருந்து இரண்டு மாத ஓய்வு எடுப்பதாக பிசிசிஐக்கு தெரிவித்தார். 

இதனால் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை.இதையடுத்து, பிராந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமென்ட்டில் கவுரவ லெப்டினன்ட் கர்னலாக இருக்கு எம்.எஸ்.தோனி கடந்த மாதம் 31-ம் தேதி காஷ்மீர் சென்றார். அங்கு ராணுவ குழுவினருடன் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டார்.இந்நிலையில், காஷ்மீரில் ராணுவத்தினருடன் இணைந்து ரோந்து பணிக்கு சென்ற எம்.எஸ்.தோனி ராணுவ பயிற்சியை முடித்தார். காஷ்மீரின் உரி, அனந்தநாக் பகுதிகளுக்கும் சென்று பணிகளை ஆற்றினார். இதையடுத்து அவர் இன்று தலைநகர் டெல்லி திரும்பினார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu CommunicationsThoothukudi Business Directory