» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அயோத்தி விவகாரத்தில் மத்தியஸ்தர்கள் குழு ஜூலை 31 வரை பேச்சுவார்த்தை : உச்சநீதிமன்றம் அனுமதி

வியாழன் 18, ஜூலை 2019 4:07:26 PM (IST)

அயோத்தி விவகாரத்தில் நீதிபதி கலிபுல்லா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மத்தியஸ்தர்கள் குழு, ஜூலை 31 ஆம் தேதி வரை பேச்சுவார்த்தை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010ம் ஆண்டு அளித்த தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில், அயோத்தி விவகாரத்துக்கு தீர்வு காண உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எப்.எம்.ஐ. கலிபுல்லா தலைமையில் ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்குரைஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் அடங்கிய 3 பேர் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. அக்குழுவுக்கு தனது அறிக்கையை ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதனிடையே, அயோத்தி விவகாரத்தில் கோபால் சிங் விசாரத் என்பவர், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், அயோத்தி விவகாரத்தில் நீதித்துறை தலையிட்டு தீர்வு காண வேண்டும், மத்தியஸ்த நடவடிக்கையால் எந்த பயனுமில்லை என்பதால் அதை முடித்துக்கொள்ளவேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்றத்தில் கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்றது. 

அப்போது நீதிபதி கலிபுல்லா தலைமையிலான குழுவுக்கு, மத்தியஸ்தம் தொடர்பான தற்போதைய நிலவரத்தை வரும் ஜூலை 18ம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.அந்த உத்தரவுபடி, உச்சநீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கையை சமரச குழு தாக்கல் செய்தது. இதையடுத்து, சமரச குழு ஜுலை 31ம் தேதி வரை பேச்சுவார்த்தையை தொடரலாம் என உச்சநீதிமன்றம் இன்று அறிவித்த்து. ஆகஸ்ட் 1ம் தேதி மீண்டும் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் எனக் கூறியதோடு வழக்கை ஆகஸ்ட் 2ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes

CSC Computer Education

Anbu Communications

Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory