» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கடற்படைக்கு 50 மில்லியன் டாலர் மதிப்பில் ஏவுகணை விநியோகம்: இஸ்ரேலுடன் இந்தியா ஒப்பந்தம்!

வியாழன் 18, ஜூலை 2019 12:52:31 PM (IST)

இந்தியக் கடற்படைக்கு நடுத்தர ஏவுகணைகளை விநியோகிக்க 50 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் இஸ்ரேல் அரசுக்குச் சொந்தமான இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் நேற்று (ஜூலை 17) கையெழுத்திட்டுள்ளது.

இதுதொடர்பாக இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மேம்பட்ட ஏவுகணைகள் மட்டுமல்லாமல் ஏவுகணை பராமரிப்பு, துணை அமைப்புகள் உள்ளிட்ட சேவைகளும் இந்த ஒப்பந்தத்தில் உள்ளடங்கியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் பாவோஸ் லெவி செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஏவுகணை மேம்பாடு, விநியோகம் மட்டுமல்லாமல் எங்களது வாடிக்கையாளர்களின் இயக்கத் தேவைகளையும் கவனத்தில்கொள்ளும் வகையில் இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது.

எங்களுக்கும் இந்தியக் கடற்படைக்கும் இடையேயான வலுவான உறவு இந்தியாவிலுள்ள எங்களது பங்குதாரர்களின் செயல்பாடுகளில் வெளிப்பட்டுள்ளது. அண்மையில், எங்களது இந்தியப் பங்குதாரர்கள் திருப்தியடையும் வகையில் வான்வெளி பாதுகாப்பு அமைப்புகளை இந்தியாவில் வெற்றிகரமாகச் சோதனையில் ஈடுபடுத்தினோம்” என்று தெரிவித்துள்ளார். வான்வழி ஏவுகணைகள், கடல்வழி ஏவுகணைகள், மேம்பட்ட பாதுகாப்பு அமைப்புகள், டிஜிட்டல் ரேடார், லாஞ்சர்கள், இன்டர்செப்டார்கள் உள்ளிட்டவற்றையும் இஸ்ரேல் இந்தியாவுக்கு விநியோகிக்கவுள்ளது.

இந்தியாவின் பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் (டிஆர்டிஓ) இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகமும், இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் அமைத்த கூட்டணியின் அடிப்படையில் இந்த ஏவுகணைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதுவரையில், இவ்வகை ஏவுகணைகள் உலகளவில் 600 கோடி டாலருக்கு விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education


Nalam Pasumaiyagam


Black Forest Cakes

Anbu CommunicationsThoothukudi Business Directory