» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அயோத்தி விவகாரத்தில் 25ம் தேதிக்குள் இடைக்கால அறிக்கை தாக்கல்: உச்சநீதிமன்றம் உத்தரவு

வியாழன் 11, ஜூலை 2019 3:11:15 PM (IST)

அயோத்தி நிலப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட சமரசக் குழு வரும் 25-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் நீண்ட காலமாக சர்ச்சைக்குரிய பகுதியாக விளங்கி வரும் ராமஜென்மபூமி-பாபர் மசூதி நில உரிமை விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்காக 3 நபர் சமரச குழுவை சுப்ரீம் கோர்ட்டு நியமித்தது. உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா தலைமையிலான இந்த குழுவில், வாழும் கலை நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர், மூத்த வக்கீல் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். 

இந்த குழுவினர் கடந்த மார்ச் மாதம் பேச்சுவார்த்தையை தொடங்கினர். இந்நிலையில், சமரசக் குழு சரியாக செயல்படவில்லை எனக்கூறி இந்து அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. இந்த மனு, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பராசரன், விரைவில் விசாரணையை தொடங்க வேண்டும் என்றும், அதற்கான தேதியை அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து, சமரசக் குழு விசாரணை நடத்தி, ஜூலை 25-ம்தேதிக்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக சமரசக் குழுவை அமைத்திருப்பதாகவும், 25ம் தேதிக்குள் அவர்கள் அறிக்கையை தாக்கல் செய்து, இணக்கமான தீர்வை பரிந்துரை செய்யாவிட்டால், அதற்குப் பிறகு இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் விசாரிக்கும் என்றும் நீதிபதிகள் கூறினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Anbu Communications


Nalam Pasumaiyagam



CSC Computer Education



Thoothukudi Business Directory