» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

உத்தரகாண்டில் துப்பாக்கியுடன் நடனமாடிய பாஜக எம்எல்ஏ : நிரந்தரமாக நீக்க பரிந்துரை

வியாழன் 11, ஜூலை 2019 11:00:13 AM (IST)

உத்தரகண்ட்டில், துப்பாக்கி மற்றும் மதுக்கோப்பையையும் ஏந்தியபடி நடனமாடிய பாஜக எம்எல்ஏ கன்வர் பிரணவ் சிங் சாம்பியனை நிரந்தரமாக கட்சியிலிருந்து நீக்க தலைவர்கள் பரிந்துரை செய்துள்ளதாக உத்தராகண்ட் மாநில தலைவர் ஷியாம் ஜாஜூ தெரிவித்துள்ளார்.

உத்தரகண்ட் மாநிலம், கான்பூர் தொகுதியின் எம்எல்ஏன கன்வர் பிரணவ் சிங்.இந்நிலையில், ஒரு வீட்டில் ஒன்று கூடிய எம்எல்ஏ கன்வர் பிரணவ், ஒரு கையில் மதுக்கோப்பையும், மற்றொரு கையில் துப்பாக்கியும், தோளில் துப்பாக்கிகளை தொங்க விட்டபடி, பிரபல பாலிவுட் பாடலுக்கு நடனமாடும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அப்போது  அவரை நண்பர்கள் உற்சாகமூட்டும் காட்சியும் அதில் இடம் பெற்றிருந்தது. இந்த விடியோ காட்சி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து தகுந்த விளக்கமளிக்குமாறு பாஜக மேலிடம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

இந்நிலையில், உத்தராகண்ட் மாநில பாஜக தலைவர் ஷியாம் ஜாஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், துப்பாக்கிகளுடன் ஆட்டம் போட்ட பாஜக எம்எல்ஏவான கன்வர் பிரணவ் சிங்கை கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கம் செய்ய பாஜக மேலிட தலைவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இவர் கையில் இருக்கும் தூப்பாக்கி முறையான உரிமம் பெறப்பட்டதா? என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்த உள்ளனர் என கூறியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications

Nalam Pasumaiyagam

CSC Computer EducationBlack Forest CakesThoothukudi Business Directory