» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ராகுல் காந்தியை டுவிட்டரில் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியது!!

புதன் 10, ஜூலை 2019 5:33:06 PM (IST)

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை டுவிட்டரில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியது.

ராகுல் காந்தி சமூக வலைதளமான டுவிட்டரில் கடந்த 2015-ம் ஆண்டு இணைந்தார். அவரை 4 ஆண்டுகளில் ஒரு கோடி பேர் பின்தொடர்ந்துள்ளார்கள். இந்த மைல்கல் நிகழ்வு குறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட் செய்தியில், டுவிட்டரில் என்னை ஒரு கோடிபேர் பின்தொடர்பவர்கள் இருக்கிறார்கள். அனைவருக்கும் நன்றியை தெரிவிக்கிறேன். இந்த நிகழ்வை நான் அமேதியில் கொண்டாடப் போகிறேன். அங்கு காங்கிரஸ் தொண்டர்களையும், ஆதரவாளர்களையும் சந்திக்கப் போகிறேன் எனக் கூறியுள்ளார்.  கடந்த 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் டுவிட்டரில் இணைந்த பிரதமர் மோடிக்கு தற்போது 4.85 கோடி பேர் பின்தொடர்பவர்களாக உள்ளனர்.


மக்கள் கருத்து

சாமிJul 11, 2019 - 11:29:10 AM | Posted IP 162.1*****

எதுக்கு - கடன் வாங்கி இருக்கிறார் போல

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

CSC Computer Education


Nalam Pasumaiyagam



Anbu Communications



Thoothukudi Business Directory