» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்திய கிரிக்கெட் அணியின் ஆரஞ்சு நிற ஜெர்சிக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

வியாழன் 27, ஜூன் 2019 11:29:24 AM (IST)



இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஆரஞ்சு நிற ஜெர்சிக்கு  காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இங்கிலாந்தில் நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், எல்லா அணிகளும் மாற்று ஜெர்சி அறிவித்து அதை ஒரே நிற ஜெர்சி கொண்ட அணிகளுக்கு எதிரான போட்டியில் அணிந்து பங்கேற்று வருகின்றன. அதில் தொடரை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணிக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் 30-ம் தேதி இந்திய அணி, இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆரஞ்சு நிற ஜெர்சி அணிந்து பங்கேற்பதாக அறிவித்துள்ளது. 

இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு நாட்டையே, காவி மயமாக மாற்ற முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளது. சமாஜ்வாடி கட்சியும்  எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இதற்கிடையே, இந்திய கிரிக்கெட் அணியின் பழைய டி-20 தொடருக்கான ஜெர்சியில் இருந்து புதிய டிசைன் தேர்வு செய்து வடிவமைக்கப்பட்டதாக ஐசிசி விளக்கம் அளித்துள்ளது. இதுவரை இந்திய அணிக்கு 24 முறை உடை மாற்றப்பட்டுள்ள நிலையில் அதில் நீல நிறமே அதிகமாக இடம் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரம் குறித்து இந்திய அணியின் பந்து வீச்சாளர் பாரத் அருண் நேற்று கூறுகையில், ‘எந்த நிற ஜெர்சி அணியப்போகிறோம் என எங்களுக்கு தெரியாது. அதுபற்றி எங்களுக்கு கவலை இல்லை. இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் போட்டி குறித்தே யோசித்துக் கொண்டிருக்கிறோம். போட்டியில் கவனம் செலுத்துவதே முக்கிய நோக்கம். நாங்கள் நீல நிறத்தில்தான் இருக்கிறோம். நீல நிறம்தான் எங்களுக்கு மிகவும் முக்கியமானது’ என கூறியுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications


Nalam Pasumaiyagam

Black Forest Cakes


CSC Computer Education



Thoothukudi Business Directory