» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நெருக்கடி நிலையை அச்சமின்றி எதிர்த்தவர்களுக்கு தலை வணங்குகிறேன்: பிரதமர் மோடி

செவ்வாய் 25, ஜூன் 2019 4:50:00 PM (IST)

1975 ம் ஆண்டு நெருக்கடி நிலையை அச்சமின்றி எதிர்த்து போராடியவர்களுக்கு தலை வணங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இந்தியாவில்  கடந்த 1975 ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி முதல் 1977ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி வரை  அவசரநிலை (எமர்ஜென்ஸி) பிரகடனம்  செய்யப்பட்டது. குடியரசுத் தலைவர் பக்ருதின் அலி அகமது வால், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் ஆலோசனை பேரில் இந்திய அரசியலமைப்பு விதி 352ன் படி அவசரநிலை பிரகடனப் படுத்தப்பட்டது. இது, இந்திரா காந்தியின் செல்வாக்கை உயர்த்துவதற்காகவும், அவருக்கு எதிரான நிலையை மக்கள் எடுக்காத நிலையை உருவாக்குதற்காகவும், தேர்தலை சந்திக்க விரும்பாததால் தேர்தலை தள்ளிப்போடும் நோக்கத்திலும், மக்களின் அடிப்படை குடியுரிமை உரிமைகளை பறிக்கும் விதத்திலும், அமல்படுத்தபட்டதாக இன்றளவும் குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றது.

இதை நினைவுகூரும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் பதிவுகளை டுவிட்டரில் வெளியிட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில், ”நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்ட காலத்தில் சிறிதும் அஞ்சாமல் அதை எதிர்த்து போராடியவர்களுக்கு இந்தியா தலைவணங்குகிறது. இந்தியாவின் ஜனநாயக நெறிமுறைகள், ஒரு சர்வாதிகார மனநிலையை வெற்றிகரமாக வென்றன” என்று பதிவிட்டுள்ளார். அத்துடன், அந்த நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள், நாளிதழ் செய்திகள் அடங்கிய தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்.

அமித் ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டுவிட்டரில், ”இதே நாளில் கடந்த 1975ம் ஆண்டு, தங்கள் சொந்த அரசியல் நலன்களுக்காக மட்டும் நாட்டின் ஜனநாயகம் கொல்லப்பட்டது. நாட்டின் குடிமக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு, செய்தித்தாள்களின் சுதந்திரங்கள் முடக்கப்பட்டன. அந்த சமயத்தில் பல சித்திரவதைகளை அனுபவத்து ஜனநாயகத்தை மீட்ட போராளிகளுக்கு நான் தலை வணங்குகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

ராஜ்நாத் சிங்

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டுவிட்டரில், ”1975ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி, நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அதன் பின்னர், மோசமான சம்பவங்கள் நிகழ்ந்தன. அவை அனைத்தும் இந்திய வரலாற்றில் இருண்ட பக்கங்களாக பார்க்கப்படுகின்றன. இந்த நாளில், இந்திய மக்கள் அனைவரும் நம் நாட்டின் அரசியலமைப்பு மற்றும் நிறுவனங்களின் ஒருமைப்பாட்டின் முக்கியத்துவத்தை நாம் என்றும் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். 


மக்கள் கருத்து

சாமிJun 27, 2019 - 07:21:12 AM | Posted IP 162.1*****

நாட்டின் நன்மைக்கு அல்ல - தன்னை காப்பாற்றிக்கொள்ள இந்திரா அம்மையார் அதை செய்தார்

samiJun 26, 2019 - 06:29:43 PM | Posted IP 162.1*****

மிசா மாயாண்டி - மிசா குப்பாண்டி - என்று பெயர் போட்டுக்கொண்ட பெரியவர்கள் காங்கிரசோடு கூட்டணி - அதற்க்கு என்ன செய்வது - சுயநலவாதிகள் அவர்கள்

ஆசீர். விJun 25, 2019 - 05:20:07 PM | Posted IP 162.1*****

அப்படியே இந்த காலகட்டத்தில் இந்திராவிடம் மன்னிப்பு கேட்ட உங்களது குருநாதர்களையும் நினைத்து தலை வணங்குங்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications

Black Forest Cakes

Nalam Pasumaiyagam

CSC Computer Education

Thoothukudi Business Directory