» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வெளிநாடுகளில் இந்தியர்களின் கருப்புப் பணம் ரூ.34 லட்சம் கோடி: நாடாளுமன்றத்தில் தகவல்

செவ்வாய் 25, ஜூன் 2019 11:04:24 AM (IST)

வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணம் தொடர்பான நிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேசிய பொருளாதார ஆராய்ச்சி கவுன்சில் (என்சிஏஇஆர்), தேசிய நிதி மேலாண்மை நிறுவனம் (என்ஐஎஃப்எம்), தேசிய பொது நிதி மற்றம் கொள்கை நிறுவனம் (என்ஐபிஎஃப்பி) ஆகிய மூன்று அமைப்புகள் சேர்ந்து நடத்திய ஆய்வில் வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கருப்புப் பணம் குறித்த தங்கள் அறிக்கையை நிதி விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் மேற்கண்ட மூன்று அமைப்புகளும் அளித்தன. இவை ஒரே அறிக்கையாக தொகுக்கப்பட்டு மக்களவையில் கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்தியா மற்றும் வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணம் தொடர்பான நிலை அறிக்கை என்ற தலைப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மனை - வீடு வணிகம், சுரங்கம், மருந்துப் பொருள் தயாரிப்பு, பான் மசாலா, குட்கா, புகையிலை, வெளிநாட்டுப் பணப் பரிமாற்றம், விவசாயப் பொருள்கள் ஊக வணிகம், திரைப்படத் துறை, தனியார் கல்வித் துறை ஆகியவற்றில் இருந்துதான் அதிக அளவில் கருப்புப் பணம் உருவாகியுள்ளது.

என்சிஏஇஆர் அறிக்கையின்படி, கடந்த 1980 முதல் 2010-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பல்வேறு வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருந்த கருப்புப் பணம் 216 பில்லியன் டாலர் (ரூ.14 லட்சம் கோடி) முதல் 490 பில்லியன் டாலர் ரூ. 34 லட்சம் கோடி) வரை இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ஐஎஃப்எம் அறிக்கைப்படி 1990 முதல் 2008 வரை கருப்புப் பணமாக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள பணத்தின் இப்போதைய மதிப்பு  ரூ.9 லட்சத்து 41 ஆயிரத்து 837 கோடியாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. என்ஐபிஎஃப்பி அறிக்கையின்படி, 1997 முதல் 2009-ஆம் ஆண்டு வரை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 0.2 சதவீதம் முதல் 7.4 சதவீதம் வரை கருப்புப் பணமாக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 2011-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தேசிய பொருளாதார ஆராய்ச்சி கவுன்சில் (என்சிஏஇஆர்), தேசிய நிதி மேலாண்மை நிறுவனம் (என்ஐஎஃப்எம்), தேசிய பொது நிதி மற்றும் கொள்கை அமைப்பு (என்ஐபிஎஃப்பி) ஆகிய மூன்று அமைப்புகளிடம் இந்தியாவில் இருந்து வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு மத்திய நிதியமைச்சகம் கேட்டுக் கொண்டது. எனினும், இந்த புள்ளி விவரங்கள் அனைத்தும் துல்லியமானது அல்ல. உள்நாடு, வெளிநாடுகளில் உள்ள கருப்புப் பணத்தை துல்லியமாகக் கணக்கிடுவது என்பது மிகவும் சவாலான பணி என்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes


CSC Computer Education

Anbu Communications


Nalam PasumaiyagamThoothukudi Business Directory