» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மம்தா பானர்ஜி மார்பிங் போட்டோ விவகாரத்தில் மன்னிப்பு கேட்க முடியாது: பிரியங்கா சர்மா

புதன் 15, மே 2019 4:52:51 PM (IST)

"மம்தா பானர்ஜி மார்பிங் போட்டோவை பகிர்ந்ததற்கு மன்னிப்பு கேட்க முடியாது" என பா.ஜனதா பிரமுகர் பிரியங்கா சர்மா கூறியுள்ளார்.

பா.ஜனதா இளைஞர் பிரிவு பெண் பிரமுகர் பிரியங்கா சர்மா, நடிகை பிரியங்கா சோப்ராவின் முகத்தில் மேற்கு வங்காள மாநில முதல்–மந்திரி மம்தா பானர்ஜியின் முகத்தை வைத்து மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இவ்விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் புகாரின்பேரில், கடந்த 10–ந் தேதி அவரை கொல்கத்தா போலீசார் கைது செய்தனர். 

இதற்கிடையே, ஜாமீன் கோரி, பிரியங்கா சர்மா சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அந்த மனு, நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரியங்கா சர்மாவுக்கு நிபந்தனை ஜாமீன் அளித்து உத்தரவிட்ட நீதிபதிகள், ஜெயிலில் இருந்து வெளிவந்தவுடன் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவரை வலியுறுத்தினர். ‘‘கருத்து சுதந்திரம் இருப்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால், மற்றொருவரின் உரிமையில் குறுக்கிடும்போது, உங்கள் கருத்து சுதந்திரம் நின்று விடும்’’ என்று நீதிபதிகள் கூறினர். 

இந்நிலையில் மார்பிங் செய்யப்பட்ட மம்தா புகைப்படத்திற்காக மன்னிப்பு கேட்கப்போவது கிடையாது என பிரியங்கா சர்மா கூறியுள்ளார். ஜாமீனில் வெளிவந்த பிரியங்கா  சர்மா பேசுகையில், "நான் வருத்தம் தெரிவிக்கப்போவது கிடையாது. நான் மன்னிப்பு கேட்கும் அளவிற்கு எந்தஒரு தவறும் செய்யவில்லை. ஜெயிலில் மிகவும் அநாகரிகமான முறையில் நடத்தப்பட்டேன். என்னை ஒரு கிரிமினல் போன்று நடத்தினார்கள். ஜெயிலில் மிகவும் துன்புறுத்தப்பட்டேன்" எனக் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Friends Track CALL TAXI & CAB (P) LTD





Black Forest Cakes

Anbu Communications



Thoothukudi Business Directory