» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கமலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!!

புதன் 15, மே 2019 4:07:57 PM (IST)

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு எதிராக தொடரப்பட்ட மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரம் செய்தபோது, "சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து” என்று பேசினார்.  கமலின் இந்த பேச்சு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் எதிரொலித்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாரதிய ஜனதா, அ.தி.மு.க. தலைவர்கள் கமலின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

சிவசேனா கட்சியும் கமலின் பேச்சை கண்டித்துள்ளது. இதற்கிடையே, கமல்ஹாசனின் இந்த விமர்சனம் குறித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் பாஜக வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது நீதிபதிகள், தமிழகத்தில் கமல் பேசியதற்கு டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகியது ஏன்? சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக வேண்டியதுதானே? என கேள்வி எழுப்பினர். இதையடுத்து, கமலுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education

Black Forest Cakes

Nalam Pasumaiyagam



Anbu Communications



Thoothukudi Business Directory