» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தீவிரவாதிகளையும், பாகிஸ்தானையும் எதிர்க்கட்சிகள் எப்போதும் ஆதரிக்கின்றன: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

செவ்வாய் 14, மே 2019 5:53:15 PM (IST)

"எதிர்க்கட்சிகள் எப்போதும் தீவிரவாதிகளையும், பாகிஸ்தானையும் ஆதரித்தே பேசி வருகின்றனர்" என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். 

உத்தர பிரதேசம் மாநிலம் பலியா மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசியதாவது: எனது தலைமையிலான அரசின் கொள்கைகள் இந்தியாவை ஒரு வலிமையான நாடாக மாற்றும் எண்ணம் கொண்டவை. அதில் நான் குறிப்பிட்ட அளவு வெற்றியும் கண்டுள்ளேன். 

ஆனால் எதிர்க்கட்சிகள் எப்போது என்னையும் எனது வேலைகளையும் எதிர்ப்பதில் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன. மக்களின் நமபிக்கை என் மீது இருப்பதாக நம்புகிறேன். அதைக் கொண்டு அவர்கள் அனைவரின் முயற்சிகளையும் நான் முறியடிப்பேன். இந்த எதிர்க்கட்சிகள் தீவிரவாதம் குறித்தோ, பாகிஸ்தானை விமர்சித்தோ பேசியதில்லை. அவர்கள் எப்போதும் தீவிரவாதிகளையும், பாகிஸ்தானையும் ஆதரித்தே பேசி வருகின்றனர். இந்த ஊழல்வாதிகள் சட்டவிரோதமான வகையில் பணத்தையும் சொத்துக்களையும் குவித்து வருகின்றனர். 

அவர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் ஆடம்பர பங்களாக்களைக் கட்டிக்கொள்வதே அவர்களது அரசியலாகும். அவர்கள் மீது விசாரணை முகமைகள் தற்போது நடவடிக்கை எடுக்க இருப்பதால் அவர்கள் தற்போது ஒன்றிணைந்து செயல்படுகின்றனர். என்னைத் திட்டாமல் அவர்களுக்கு ஒரு நாள் கூட கடந்து போகாது. ஆறு கட்ட வாக்குப்பதிவுகளுக்கு பின்னால் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஏமாற்றத்தின் விளைவே அது. அவர்கள் தங்களது தோல்வியை உணர்ந்து விட்டனர். ஆனால் அவர்களது வசைகளை நான் ஒரு பாராட்டாகவே எடுத்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து

மக்கள்மே 15, 2019 - 05:23:58 PM | Posted IP 162.1*****

கேஸ் மானியம் மற்றும் அத்யாவசிய பொருட்கள் விலைவாசி சற்றே பாா்க்கவும்

இவன்மே 15, 2019 - 11:26:32 AM | Posted IP 162.1*****

புது புதுசா வாயால் வடை சுடுபவர் மோடி ..இன்று பாகிஸ்தான் வடை

Joseமே 15, 2019 - 10:40:07 AM | Posted IP 162.1*****

Chowkidar ஜி 5 வருடம் மக்களுக்கு நீங்கள் செய்த செயல்களை கூறி ஓட்டு கேளுங்கள் அதை விடுத்து அடுத்தவரை குறை கூறுவதை நிறுத்துங்கள். பாகிஸ்தான், புல்வாமா, தீவிரவாதம் இதை விடுத்து வேறு ஒன்றும் உங்களுக்கு தெரியாதா Chowkidar ஜி...

உண்மைமே 14, 2019 - 08:32:32 PM | Posted IP 162.1*****

நீங்க பொய் பொய்யா சொல்றீங்களே..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors


Joseph Marketing

CSC Computer Education

Black Forest Cakes

Nalam PasumaiyagamAnbu CommunicationsThoothukudi Business Directory