» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கோட்சே ஒரு கொலைகாரன்... பயங்கரவாதி அல்ல: கமல் கருத்துக்கு சுப்பிரமணிய சுவாமி கண்டனம்

செவ்வாய் 14, மே 2019 11:21:30 AM (IST)

காந்தியை கொலை செய்த கோட்சே ஒரு கொலைக்காரனே தவிர பயங்கரவாதி அல்ல என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் அரவக்குறிச்சி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, மகாத்மா காந்தியை சுட்டுக் கொலை செய்த நாதுராம் கோட்சேவை, சுதந்திர இந்தியாவின் முதல் ஹிந்து பயங்கரவாதி எனக் குறிப்பிட்டுள்ளார்.  கமலின் பேச்சுக்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர எழுந்துள்ளது. கமலின் சர்ச்சை பேச்சு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலுக்கு எதிராக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகுவிடம் தமிழக பாஜக புகார் மனு அளித்துள்ளது. 

இந்நிலையில், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணிய சுவாமி கமலின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், கமல் கூறியப்படி கோட்சே பயங்கரவாதி இல்லை. கோட்சே ஒரு கொலைக்காரன். யார் பயங்கரவாதி என ஐ.நா ஒரு வரையறை கொடுத்துள்ளது. தேசத்தையும் மக்களையும் அச்சுறுத்துபவர்தான் பயங்கரவாதி.  கோட்சே மகாத்மா காந்தியை கொலை செய்த கொலையாளிதான். ஐ.நா வரையறைப்படி கோட்சே பயங்கரவாதி இல்லை என்றார். மேலும், இந்துக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி வருகிறார் கமல்ஹாசன். அவரது கட்சிக்கு தடை விதிக்க வேண்டும் என சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

நிஹாமே 15, 2019 - 11:49:34 AM | Posted IP 108.1*****

நியாயமான பேச்சாக தெரிகிறது.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Friends Track CALL TAXI & CAB (P) LTD

Black Forest Cakes


Anbu Communications
Thoothukudi Business Directory